மலேசியாவில் நான் கலந்துகொள்ளும் ஓர் இலக்கியமுகாம்

ஊட்டியில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் நடத்தும் இலக்கியமுகாம் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்துவருகிறது [ஏப்ரலில் அடுத்த முகாம் நிகழும்] ஒவ்வொருமுறையும் மலேசியாவில் இருந்து சு.யுவராஜன், கோ.புண்ணியவான், சுவாமி பிரம்மானந்தா போன்றவர்கள் கலந்துகொள்வார்கள். ஒருமுறை மலேசியாவிலும் ஒன்று அவ்வாறு ஏற்பாடு செய்யலாமே என்று நண்பர்கள் சொன்னார்கள். அவ்வாறாக சுவாமி பிரம்மானந்தா மற்றும் கோ.புண்ணியவான் ஏற்பாட்டில் மலேசியாவில் ஓர் இலக்கிய விவாத முகாம் நிகழவிருக்கிறது.

முகாமின் விதிகள் ஊட்டி குருகுலச் சந்திப்பின் விதிகளே. நடைபெறும் முறையும் இதுவே. அதாவது நேரம் வீணாகும் உரையாடல்கள் இருக்காது. செறிவான இலக்கிய- தத்துவ- அழகியல் விவாதங்கள். ஆனால் நகைச்சுவையும் உற்சாகமும் கொண்ட சந்திப்பாகவும் அமையும்

இந்தியாவில் இருந்து நான் கலந்துகொள்கிறேன். மற்றும் இரு நண்பர்கள் வருகிறார்கள். மலேசியா மற்றும் சிங்கப்பூர் நண்பர்கள் கலந்துகொள்ளலாம்.

அறிவிப்பு கீழே


எழுத்தாளர் ஜெயமோகனோடு இலக்கியமுகாம்.

கூலிம் தியானஆஸ்ரம நவீன இலக்கியக்களம் எழுத்தாளர் ஜெயமோகனோடு ஒரு இரண்டரைநாள் இலக்கிய முகாமை ஏற்பாடு செய்துள்ளது.இம்முகாமில் மலேசிய, இந்திய உலக இலக்கியங்கள் தலைப்பில் ஜெயமோகன் உரையாற்றுவார்.அதன்பின்னர் கலந்துரையாடல் நடைபெறும்.இது முழுக்க முழுக்க இலக்கியம் பேசும் நிகழ்வாகும்.

தேதி: 22, 23 24 மார்ச் மாதம் சனி ஞாயிறு திங்கள் ஆகிய கிழமைகளில் நடைபெறும். பள்ளி விடுமுறைநாட்களில் இந்நிகழ்வுஅமைகிறது.

22 மார்ச் மதிய உணவுக்குப் பிறகு இலக்கியஉரையாடல் தொடங்கும்.24 மார்ச் மதியஉணவோடு முகாம் முடிவுறும்.

பினாங்கு கொடிமலையில் உள்ள பிரதர்ஸ் பங்களாவில் இந்நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ரிங்கிட் மலேசியா 200. கட்டவேண்டும். 22 மார்ச் மதியம் தொடங்கி மூன்று முறை பகல் உணவு, இரண்டு முறை காலைஉணவு, இரண்டு முறை இரவு உணவு, ஐந்துமுறை தேநீர் வழங்கப்படும். தங்கும் வசதியும் ஏற்பாடாகியுள்ளது.

கலந்துகொள்ள விழைவோர் கவனத்துக்கு மேலும் சிலதகவல்கள்.

22.மார்ச் காலை 9.00 மணிக்கு பினாங்கு தண்ணீர்மலைக் கோயில் அருகாமையில் உள்ள போர்ட்டேனிக்கல் கார்டனில் அனைவரும் கூடுகிறோம். அங்கிருந்து வாடகை வாகனம் மூலம் கொடிமலைக்குச் செல்வதாகத் திட்டம்.அதற்கான பயணக்கட்டணத்தை பங்கெடுப்பவர்களே கட்டவேண்டும்.

இலக்கிய முகாம் காலக்கட்டத்தில் மதுவகைகள் அருந்துவது அனுமதிக்கப்பட மாட்டாது. எல்லா உரையாடல் நிகழ்வுகளிலும் தொடர்ந்து பங்கெடுக்கவேண்டும்.

பணம் கட்டியவர்கள் உங்கள் தொலைபேசி மின்னஞ்சல் விபரங்களைக் கொடுக்கவேண்டும்.

கலந்துகொள்பவர்கள் 10.3.2014க்குள் பதிவுசெய்துகொள்ளவேண்டும்.

முன் பதிவுசெய்து கொள்ளாதவர்கள் முகாமில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.நீங்கள் பணம் செலுத்த வேண்டிய எண் 102036367024 maybank(kumarasamyThannimalai)

மேலும் தகவல்பெற கோ.புண்ணியவான் 0195584905, குமாரசாமி 013 4315359, மணிமாறன் 019 4743231

முந்தைய கட்டுரைஇலங்கை அகதிகள் குடியுரிமை – எதிர்வினைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 20