மார்ச் மாதம் 16 ஆம் தேதிமுதல் ஒருவாரம் மலேசியாவுக்கு ஒரு இலக்கியப் பயணம். கொலாலம்பூர் பினாங்கு சுங்கைப்பட்டாணிக்குச் செல்வதாக உள்ளேன். கொலாலம்பூரில் ஒரு கவிதை நிகழ்ச்சி நவீன் ஒருங்கிணைக்கிறார். [[email protected]]
முதற்கனல் செம்பதிப்புக்கு பணம்கட்டுவது பற்றி சில மலேசிய நண்பர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்திய ரூபாயில் ரூ 600 விலை உடையது செம்பதிப்பு நூல். மலேசியாவுக்கு வரும்போது கொண்டு பிரதிகளைக் கொண்டு வருவேன் செம்பதிப்பு முன்னதாக குறிப்பிட்ட பிரதிகள் மட்டுமே அச்சிடப்படுவதனால்; செம்பதிப்பு வேண்டுபவர்கள் மட்டும் முன்னதாகவே பதிவுசெய்யவேண்டும். அந்தப்பிரதிகள் மட்டுமே கொண்டுவரப்படும். தபால்கட்டணம் இல்லை.