லோகி,மலையாளசினிமா:கடிதங்கள்

வணக்கம்.

நான் சாம்ராஜ்.ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன்.உங்களின் லோகிதாஸின் திரைக்கதை பற்றியான கட்டுரையை வாசித்தேன்.மலையாள சினிமாவைப்பற்றி எனது ஓர்மைகளை கிளறுவதாக இருந்தது.நிச்சயமாய் கிரீடம் என்னை ஆகர்ஷித்த படம். கணக்கற்ற தடவை பார்த்திருப்பேன்.இன்றைக்கும் அது எஙகள் குடும்பப்படம் தான். லோகிதாஸின் மிகச்சிறந்த படங்கள் என கிரீடத்தையும் செங்கோலையுமே நான்
கருதுகிறேன்.

செங்கோல்,மனிதர்களின் ஆகச்சிறந்த தருணங்களை வெளிக்கொணர்ந்தது.குறிப்பாக மோகன்லால் கடையில் காலை உணவு அருந்திக்கொண்டிருக்கும் போது அவன் அப்பாவும் தங்கையும் நாடக ஒத்திகைக்கு போகும் காட்சி.லாட்ஜ் அறையிலிருந்து தன் வாழ்வு திசை மாறி போன தெருவை பார்த்து கொச்சின் ஹனிபாவிடம் பேசும் காட்சி.தன்னால் ஊனமுற்றவனாக்க பட்ட பரமேஸ்வரனின் சைக்கிள் கடைக்கு போகும்
தருணம்.இப்படி நூற்றுக்கணக்கான தருணங்கள் இந்த இரண்டு திரைப்படங்களிலும் விரவிக்கிடக்கின்றன.எப்பொழுது பார்த்தாலும் லாலேட்டனும் திலகனும் கண்ணீரை கோருகிறார்கள்.

லோகிதாசை ஒரே ஒரு முறை சென்னை புத்தகக்கண்காட்சியில் சந்தித்த பொழுது இதையே சொன்னேன்.கூடுதலாக உங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேன் என்றும் கூறினேன்.அவர் ஆச்சரியமாக எங்கே என்றார்.செங்கோலில் திலகன் விடுதியில் தற்கொலை செய்து கொள்ளும் பொழுது பக்கத்து அறைக்காரரை நீங்கள் நின்றீர்கள் என்றேன்.பெரிய சிரிப்பாக அதிலா என்றார்.மீண்டும் அவரை பார்த்தது லக்கடியில்
அவரது அமராவதி வீட்டில் எரிந்து கொண்டிருக்கும் பொழுது தான்.

மலையாள சினிமாவில் எனது பிரியத்துக்குரிய நடிகரும்,நண்பருமான முரளியும், 20 வருடமாக என்னை ஆகர்ஷித்த லோகிதாஷூம் மரித்துப்போனது பெரும் துக்கம்.

அன்புடன்
சாம் ராஜ்.

அன்புள்ள சாம்ராஜ்

நலம்தானே?

நானும் நலமே.

லோகியை நீங்கள் சந்தித்ததைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். லோகியை தனிமையில் சந்தித்திருந்தால் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய ஆளுமைகளில் ஒன்றாக அவர் இருந்திருப்பார். மனிதர்களை நேசித்த அவரைபோன்றவர்களை நான் குறைவாகவே பார்த்திருக்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

அவர்களுக்கு
நலம்
மனைவியும் மக்களும் நலம்தானே?
லோகிததாஸ் திரைக்கதைகள் பற்றிய உங்கள் கட்டுரைகளை தவறாமல் வாசித்து வருகிறேன்.; மலையாள படங்கள் பார்க்கவேண்டும் என்று மிக்க ஆவலாக இருக்கிறேன். ஒரு லிஸ்ட் தர முடியுமா?
அன்புடன் சிவா
மறுபடியும் அமெரிக்கா நாட்டிற்கு எப்போது வருவீர்கள்? கட்டாயம் குடும்பத்துடன் வரவும்..

siva sakthivel

அன்புள்ள சிவா

மலையாள சினிமாக்களின் ஒரு விரிவான பட்டியல் என் இணைய தளத்தில் ஏற்கனவே உள்ளது. அதை அனுப்பியிருக்கிறேன், பாருங்கள். மலையாள சினிமா எப்போதுமே நல்ல படங்களை உருவாக்க்ககூடியதாகவே இருக்கிறது. அதற்குக் காரணம் அங்கே எழுத்தாளர்களின் இலக்கியப்பங்களிப்பு அதிகம்
ஜெ

லோகிததாஸ் மற்றும் திரைக்கதைகள் குறித்த கட்டுரையை படித்து வருகிறேன். தெரிந்த விஷயங்களை உங்கள் மூலம் மேலும் அறிந்து கொள்வது மகிழ்ச்சியை தருகிறது…


ஜீவா JEEVA

நானும் நலம்.

சினிமாகுறித்து நீங்கள் எழுதுவதுபோல ஆய்வின் அடிப்படையில் நான் எழுத முடியாது. அந்த அளவுக்கு சினிமா பார்த்தவன் அல்ல. நான் அதிகம் பார்த்தவை மலையாளப்படங்கள். அதிலும் லோகி படங்களை என் நண்பர் என்பதற்காக கூர்ந்து பார்த்திருக்கிறேன். அந்த அடிப்படையிலேயே எழுதினேன்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன், தங்களது ‘குஷ்பு குளித்த குளம்’ கட்டுரையில் வரும் அந்த சினிமா மேதை பெரியவரை போல என்னை நான் உணருகிறேன் ஆனாலும் என்ன செய்வது…உண்மையை சொல்லி தானே ஆகவேண்டும். “மாலயோகம்” படத்தில் வரும் கதாபாத்திரம் மினி நாயர் அல்ல… கல்பனா.

மற்றபடி உங்கள் கட்டுரை அருமை. ஆனால் என்னை போல நீங்கள் குறிப்பிடும் அந்த திரைப்படங்களை பார்த்த…மலையாள சினிமாவை உணர்ந்தவர்களால் தான் அக்கட்டுரைகளை முழுமையாக ரசிக்க முடியுமென்று நினைக்கிறேன். நன்றி.

மற்றுமொரு தகவல்: தாங்கள் மினி நாயர் என்று புகைபடத்தில் குறிப்பிட்டு உள்ளவர் பெயர் மினி நாயர் அல்ல. பிந்து பணிக்கர். நன்றி.

கிருஷ்ணன் ரவிக்குமார்

அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்

தகவல்களுக்கு நன்றி. நினைவிலிருந்து எழுதபப்ட்ட கட்டுரைகள் அவை. திருத்திக்கொள்கிறேன்

ஜெ

மலையாள சினிமா ஒரு பட்டியல்

மலையாள சினிமா கடிதங்கள்

சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.

ஜான்: இன்னொருகடிதம்

ஜான் ஆபிரகாம்:மீண்டும் ஒரு கடிதம்

ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்

சினிமாவுக்கு ஒரு களப்பலி

மலையாள இலக்கியம்

லோகி,2. கலைஞன்

லோகி:கடிதங்கள்

அஞ்சலி: லோகித் தாஸ்

சமரச சினிமா

கேரள இதழ்கள்

லோகி.5, தனியன்

லோகி4,தனியன்

லோகி. 3, ரசிகன்

முரளி

முரளி:கடிதங்கள்

சினிமா, கடிதங்கள்

உப்பிட்ட வாழ்க்கைகள் : லோகிததாஸின் திரைக்கதைகள் 3

உப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) 2

கதையின் காணப்படாத பக்கங்கள்,லோகிததாஸ்

லோகி கடிதங்கள்

ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல் 2

ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல்-1

ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல்-1

உப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்)

முந்தைய கட்டுரைவ.கௌதமனும் ‘தலைமுறைக’ளும்
அடுத்த கட்டுரைமீரா கதிரவன்