பார்வதி கிருஷ்ணன்- அஞ்சலி

இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சியின் மூத்த தலைவரும் மகத்தான தியாக வாழ்க்கை கொண்டவருமான பார்வதி கிருஷ்ணன் இன்று [20-2-2014] மறைந்தார். சென்னை மாகாண முதல்வராக இருந்த டாக்டர் சுப்பராயனின் மகளாக 1919 ல் பிறந்தவர் பார்வதி. ஆக்ஸ்போர்டில் பீஏ படிக்கும்போது கம்யூனிஸக் கொள்கைகள் மீது ஆர்வம்கொண்டார்.அங்கே சந்தித்த கேரளத்துத் தோழரான என்.கெ.கிருஷ்ணனை மணந்துகொண்டார். இந்தியா திரும்பி கம்யூனிஸ்டுக்கட்சியின் முழுநேர ஊழியராக ஆகி கணவருடன் இணைந்து பணியாற்றினார்

அவரது தந்தை அப்போது சென்னைமாகாண முதல்வர். அவர் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பார்வதி நேரடியாக களப்பணியாற்றினார். கம்யூனிஸ்டுகள் தேடித்தேடி வேட்டையாடப்பட்ட நாட்களில் அவர் தலைமறைவாகவும் பணியாற்றவேண்டியிருந்தது.1954ல் இந்தியாவின் முதல் பாராளுமன்றத்தில் மேல்சபை உறுபினராக பணியாற்றினார் 1957லும் 1974லும் 1977லும் கோவை பாராளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

என்.கெ.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு சாக்சமும் தியாகமும் நிறைந்த பார்வதி- கிருஷ்ணன் தம்பதியினரின் வாழ்க்கையைப்பற்றி விரிவாக பேசக்கூடியது. அந்நூலுக்கு நான் எழுதிய முன்னுரை இனிதினிது என்ற தலைப்பில் முன்னர் இந்த தளத்தில் பிரசுரமாகியிருக்கிறது. ‘முன்சுவடுகள்’ என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது

பார்வதி கிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி

பார்வதி கிருஷ்ணன்= இந்து கட்டுரை

முந்தைய கட்டுரைவலசைப்பறவை 4 : புயலும் மகரந்தங்களும்
அடுத்த கட்டுரைவெள்ளையானையும் பிழைகளும்..