உதயன் (துரம் – மன்னார்) எழுதிய “லோமியா” நாவல் விமர்சன ஒன்றுகூடல்

 

மன்னார் மாவட்டம், பேசாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட உதயன்; நாடகம், கவிதை, சிறுகதை போன்ற ஆக்க இலக்கியங்களைப் படைத்து வருபவர். அந்த வரிசையில் அவரால் எழுதப் பெற்ற முதல் நாவல் “லோமியா”. 80 ஆண்டுகளுக்கு முன்னைய கதையான “லோமியா” தமிழ்நாட்டில் இருந்து வந்து சேர்ந்த குடும்பத்திற்கும் அந்தக் குடும்பம் குடியேறிய ஊராருக்கும் இடையேயான உறவுச்சிக்கலை விவரிக்கின்றது. ஈழத்தின் நெய்தல் நில வாழ்க்கையின் பரிமாணத்தை, பச்சையாகப் பகிர்வதால் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகின்றது.

 

 

இடம்; : 36 Salamander  Street, Toronto, Canada
காலம்; : 25.10.2009 ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 6.30 மணி

இலக்கிய ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு: (647)237-3619, (416)500-9016