சுந்தர ராமசாமி விருது 2009

இளம் படைப்பாளிகளுக்கான
சுந்தர ராமசாமி விருது 2009

அன்புள்ள ஆசிரியருக்கு

வணக்கம்.

சுந்தர ராமசாமி நினைவாக நெய்தல் அமைப்பு ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர் ஒருவருக்கு இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது வழங்கி கௌரவித்து வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.

2009ஆம் ஆண்டுக்கான விருது திரு. எஸ். செந்தில்குமாருக்கு வழங்கப்படுகிறது. சுகுமாரன், பாவண்ணன், அரவிந்தன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு இந்த முடிவை அறிவித்துள்ளது.

2007இல் கண்மணி குணசேகரனுக்கும் 2008இல் பிரான்ஸிஸ் கிருபாவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த ஆண்டின் விருது வழங்கும் விழா அக்டோபர் 31 அன்று நாகர்கோவில், ரோட்டரி கம்யூனிட்டி ஹாலில் நடைபெறும்.

இந்தச் செய்தியைத் தங்கள் ஊடகத்தில் வெளியிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்
நெய்தல் கிருஷ்ணன்
அக்டோபர் 21, 2009

முந்தைய கட்டுரைகாவல்கோட்டம் 1
அடுத்த கட்டுரைகனடா இலக்கிய நிகழ்ச்சி