ஒரு புது முயற்சி

நண்பர் சஜிதரன் அவரது ஒரு புதுமுயற்சிபற்றி எழுதியிருந்தார். பெரிய திட்டம் சிறப்பாக வருமென்றால் தமிழில் ஒரு கொடையாக அமையும். அவருக்கு என் வாழ்த்துக்கள்

ஜெ

சஜிதரன் குறிப்பு

தஞ்சைப் பெரிய கோவில் பற்றிய BBCஇன் ஆவணப் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா.. அருமையாக எடுத்திருப்பார்கள்.. நமது வரலாற்றைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் மேலைத்தேயத்தவர்கள் இலகுவாக அறிந்து கொள்ளக் கூடிய விதத்தில் ஆங்கிலத்தில் இத்தகைய ஒளியாவணங்கள் ஏராளம் உள்ளன..
வெளியுலகைப் பற்றித் தமிழில் இப்படியான ஆக்கங்கள் இருந்தால் எவ்வளவு நல்லது என்று தஞ்சைக் கோவில் ஒளியாவணத்தைப் பார்த்தபோது தோன்றியது.

அது அளித்த தூண்டுதலில், இந்த எண்ணத்துக்குச் செயல் வடிவம் கொடுக்கலாம் என்று, ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்னம் ‘யாதும் ஊரே’ என்ற செயற்றிட்டத்தை ஆரம்பித்தேன். இங்கிலாந்தில் தொடங்கி உலகின் வெவ்வேறு இடங்கள் பற்றி – அவற்றின் வரலாறுகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் கவனப்படுத்தி – விவரணப்படங்களைத் தயாரிப்பது என்பது திட்டத்தின் நோக்கம். Video Production வேலைகளை நண்பர் ஹதீபன் பொறுப்பெடுத்துக் கொண்டார். மாதத்துக்கு ஒரு நிகழ்ச்சி என்ற அடிப்படையில் செய்வதென்று திட்டமிட்டோம். இது ஒரு கனவுத்திட்டம்

ஆனால் ஓரிரண்டு பேரின் முயற்சி மாத்திரமே மூலதனமாக இருந்த இந்தத் திட்டத்தை அந்த வேகத்தில் முன்னெடுத்துச் செல்வது நினைத்தது போல அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. இந்தத் தொடரின் முதலாவது அத்தியாயத்தை (36 நிமிடங்கள்) முழுமைப்படுத்துவதற்கே எட்டு மாதங்கள் சென்றிருக்கின்றன. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் பற்றிய முதலாவது அங்கம் தற்போது முழுமையடைந்திருக்கிறது. பலத்த சவால்களையும் தாண்டி இது நேர்த்தியானதொரு வடிவத்தை எட்டியிருப்பது மகிழ்ச்சியே.

இணைப்பில் இருப்பது அந்த ஒளியாவணத்தின் trailer (50 secs). முழு வடிவத்தை இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிடக் கூடியதாயிருக்கும்.

இந்த முயற்சிக்கு ஊக்கமளிக்க விரும்பும் நண்பர்கள் இந்த வீடியோவை தமது Facebook பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நண்பர்களையும் பகிர்ந்து கொள்ளும்படி பரிந்துரைப்பீர்கள் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி. இதற்கான வரவேற்பு தரும் புத்த்துணர்ச்சியைக் கொண்டு தான் அடுத்த அடியை எடுத்து வைக்கலாம்.. நன்றி நண்பர்களே :)

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Jfa6fzYNB-Q

முன்னோட்ட வீடியோ:

http://youtu.be/Jfa6fzYNB-Q

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7