வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை ஆங் மோ கியோ சிங்கப்பூர் நூலகத்தில் ஒளிப்பதிவாளரும் கட்டுரையாளருமான செழியன் அவர்களுடன் ஒரு சந்திப்புக் கூட்டமும் நடைப்பெறவுள்ளது. மாலை மணி 6.00க்கு கவிஞர் அய்யப்ப மாதவன் இயக்கிய “தனி” குறும்படம் குறித்த மதிப்புரையும் வழங்கப்படவுள்ளது.
குறும்படம் குறித்த மதிப்புரைகளை வழங்குபவர்கள்:
1.எழுத்தாளர் இராம கண்ணபிரான்
2.எம்.கே.குமார்
3.ஷநவாஸ்
4.கே.பாலமுருகன்
மேலும் நல்ல சினிமா பற்றிய கலந்துரையாடலும் இடம்பெறுகிறது.
மேல் விவரங்களுக்கு: +60164806241
எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸ் சிங்கப்பூர் பயணம்
“பின்நவீனத்துவம் நமது கலை, இலக்கிய , மொழி மேம்பாட்டிற்கு மிக அவசியமானது, இந்தியாவில் பின்நவீனத்துவத்தை ஓர் இருண்மையான வடிவம் என்கிற அளவில் புரிந்து வைத்துக் கொண்டு இருண்மையைத் தேடியே அதற்கான புரிதல்களை நகர்த்துகிறார்கள்” என்று தனது வலுவான சிந்தனைகளை கருத்துருவாக்கங்களை இதுநாள்வரை உருவாகியிருக்கும் பின்நவீனத்து புரிதல்களை முரண்பாடுகளை உடைப்பதாக இருக்கிறது எம்.ஜி.சுரேஸ் அவர்களின் உரையாடல்.
அநங்கம் இதழ் சார்பாக வரும் சனிக்கிழமை அவரைச் சிங்கப்பூரில் சந்தித்து “பின்நவீனத்துவமும் அதன் முரண்பாடுகளும்” குறித்து விரிவான உரையாடலை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம். இந்த உரையாடலில் பின்நவீனத்துவம் குறித்து அண்மையில் எழுந்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் முன்வைத்து அவர் தரப்பு கருத்துகள் சேகரிக்கப்படும்.
கே.பாலமுருகன்
மின்னஞ்சல்: [email protected]