முதற்கனல் நிறைவு

வெண்முரசு மகாபாரத நாவல்தொடரின் முதல் நாவலான முதற்கனல் இங்கே முடிவுறுகிறது. மகாபாரதத்தின் கதைத் தொடர்ச்சியையும் கதைமாந்தரின் வளர்ச்சியையும் பேணினாலும் கூட ஒவ்வொரு நாவலையும் தன்னளவில் முழுமை கொண்டதாகவே எழுதவிருக்கிறேன்.

அவ்வகையில் முதல்நாவலான முதற்கனல் வடிவம் சார்ந்தும் தரிசனம் சார்ந்தும் நிறைவுற்றிருக்கிறது என்பதை வாசகர் காணலாம். இந்நாவல் உடனடியாக நற்றிணை வெளியீடாக வரவிருக்கிறது.

இந்த மாபெரும் முயற்சியை என் குருவடிவமாக இன்றுள்ளவர்களில் முக்கியமானவரான இளையராஜா அவர்களை நேரில் சென்று பாதம் தொட்டு வணங்கி ஆசிபெற்று எழுதத் தொடங்கினேன். முதல்நாவலை அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

அடுத்தநாவல் 23-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக வெளிவரும்.

ஜெ

முந்தைய கட்டுரைகடலோர மரம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு- நாவல் 1 – முதற்கனல் – முழுத்தொகுப்பு