கருவியும் சிந்தனையும்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

“தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்” கட்டுரையைப் படித்து நான் எழுதிய கடிதத்தையும் உங்கள் விவரமான பதிலையும் “இணையமும் நம் சிந்தனையும்” என்று ஜன. 12ம் நாள் உங்கள் இணையதளத்தில் ஏற்றம் செய்ததற்கு மிக்க நன்றி.

கூகிள் பற்றி உங்கள் கருத்தை விரிவாகக் கூறியிருந்தீர்கள். உங்கள் கருத்தையொட்டி சில வருடங்களுக்கு முன் படித்த கட்டுரை ஒன்று நினைவுக்கு வந்தது. இத்துடன் இணைப்பு அனுப்பியுள்ளேன்.

http://www.theatlantic.com/magazine/archive/2008/07/is-google-making-us-stupid/306868/

கட்டுரையில் கீழ்க்கண்ட வரிகள் என்னைக்கவர்ந்தன:

(நீட்சே பார்வை பழுதானதால் பேனாவிலிருந்து தட்டச்சுக்கு மாறியிருந்தார். நண்பர்களுக்கு அவருடைய எழுத்து நடையில் மாற்றம் தெரிந்தது)

“You are right,” Nietzsche replied, “our writing equipment takes part in the forming of our thoughts.” Under the sway of the machine, writes the German media scholar Friedrich A. Kittler , Nietzsche’s prose “changed from arguments to aphorisms, from thoughts to puns, from rhetoric to telegram style.”

இதே போன்று நாம் உபயோகிக்கும் மொழி நம் சிந்தனையை பாதிக்கிறது என்ற கருதுகோளை இத்துடன் இணைத்துள்ள கட்டுரை முன்வைக்கிறது.

உங்களுடைய படிக்கும் சுமை ஒரளவு புரிகிறது. ‘சால மிகுத்து’ இணைப்புகள் அனுப்புகிறோமோ என்ற தயக்கம் எழுகிறது. இருந்தும் இந்த இரண்டு கட்டுரைகளும் உங்கள் நேரத்தை விரயமாக்காது என்று நம்புகிறேன்.

– வைகுண்டம்
மதுரை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32