நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கியத்தில் பிரதி மேம்படுத்துனராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருபவர் எம் சிவசுப்ரமணியம் அவர்கள். சுந்தர ராமசாமி, நீல பத்மனாபன், பொன்னீலன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன், தோப்பில் முகம்மது மீரான் ஆகியோரின் படைப்புகளை செம்மை செய்ததில் அவரது பங்கு மிக முக்கியமானது. இதுநாள் வரை வெளியே தெரியாத சக்தியாகவே அவர் செயல்பட்டு வந்தார். சமீபமாகத்தான் அவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகின்றன. எம் எஸ் அவர்களின் இரு நூல்கள் இப்போது வெளியிடப்படுகின்றன.இந்த சந்தர்ப்பத்தை அவரை கெளரவிக்கும் ஒரு தருணமாகவும் நிகழ்த்த நண்பர்கள் முடிவு செய்துள்ளார்கள்
நாள். 9 – 03. 2003 [ஞாயிறு ] மாலை 5 மணி
இடம் டி வி டி மேநிலைப்பள்ளி கோட்டாறு
தலைமை ஆய்வாளர் குமரிமைந்தன் அவர்கள்
‘அமைதியான ஒரு மாலைப்பொழுதில் ‘ [உலகச்சிறுகதைகள் .மொழிபெயர்ப்பு எம் எஸ் ]
வெளியிடுபவர் நாவலாசிரியர் பொன்னீலன்
தேடிச்செல்லவேண்டாம் [பால் சகரியாவின் மலையாளச்சிறுகதைகள் ‘ மொழிபெயர்ப்பு எம் எஸ் ]
வெளியிடுபவர் நாவலாசிரியர் நீல பத்மநாபன்
வாழ்த்துரை இலக்கியவிமரிசகர் முனைவர் எம் வேதசகாயகுமார்
வாழ்த்துரை இலக்கியவிமரிசகர் முனைவர் ஸ்ரீகுமார்
நன்றியுரை ஜெயமோகன்
நூல்கள் வெளியீடு தமிழினி , யுனைட்டட் ரைட்டர்ஸ் , 342 டிடிகெ சாலை ராயப்பேட்டை சென்னை 14
அன்புடன்
எஸ் அருண்மொழிநங்கை அமைப்பாளர்
***