மூணாறு

விஷ்ணுபுரம் – சொல்புதிது நண்பர்கள் குழுமம் சார்பில் வெண்முரசு பற்றிய ஓரு விவாதத்துக்காக மூணாறு அருகே உள்ள பூப்பாறை என்ற இடத்தில் கூடினோம். நண்பர் சேலம் பிரசாத் , ஈரோடு விஜயராகவன் இருவரும் நிகழ்ச்சியை ஒழுங்குசெய்திருந்தனர். இருபதுநண்பர்கள் பங்கெடுத்தனர்.

காலை மாலை இருமுறை காட்டுக்குள் நடப்பதும் மூன்று அமர்வுகளாக இதுவரை வந்த வெண்முரசு அத்தியாயங்களைப்பற்றி விவாதிப்பதும் நோக்கம். நெருப்பு எரிய சூழ்ந்து அமர்ந்து நாவலின் சாத்தியங்கள் பற்றியும் நிகழ்ந்தவை பற்றியும் விவாதித்தது ஊக்கமூட்டுவதாக அமைந்தது. நண்பர் ஜடாயு மகாகவி ஃபாசன் தொடங்கி ஆயிரத்தைநூறு வருடங்களாக நிகழ்ந்துவரும் மகாபாரத மறு ஆக்கங்களின் மரபைப்பற்றி விரிவாகப் பேசினார். ராஜமாணிக்கம் மகாபாரதத்தின் கட்டமைப்பு பற்றிப் பேசினார். நண்பர்கள் எதிர்வினைகளைப் பதிவுசெய்தனர்

ஜடாயு
தேவதேவன்

மேலும்படங்கள்

முந்தைய கட்டுரைவலசைப்பறவை- 1, காற்றுமானியின் நடுநிலை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22