விறலி

விறலி – ஒரு நல்ல கதை.எளிமையான சகஜமான உரையாடல்கள் வழியாகச் சென்று , சொல்லப்படாத அனுபவ உலகுக்குள் நுழைந்து, அழுத்தமான வலியைச் சித்தரிக்கிறது. இந்த எழுத்தாளரின் இருகதைகளை முன்னரே நான் வாசித்திருந்தாலும் இதையே அவர் எழுத்தாளர் என்பதற்கான சான்றாகக் கொள்கிறேன்.

இதை கலையாக்குவது இக்கதையின் முடிவில் ஒரு முடிச்சுக்காக முனையலாகாது என உணர்ந்துகொண்ட ஆசிரியரின் தன்னுணர்வு. கலையுணர்வு என நான் சொல்வது அதையே. மென்மையான ஓர் உணர்வுகூறலாக மட்டுமே முடித்துக்கொள்கிறார்

வண்ணதாசன் தமிழின் ஓரு முக்கியமான மரபு.வண்ணதாசன் நுழையவே அஞ்சும் வாழ்வுக்களங்களிலும் அவருக்கு இடமிருப்பது வியக்க வைத்தது. ராஜன் ராதாமணாளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

http://www.rajanleaks.com/2014/01/blog-post.html

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8
அடுத்த கட்டுரைவெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதி