ஜெயமோகனின் காடு:கரு. ஆறுமுகத்தமிழன்

 

காமம் காமம் என்ப; காமம்,

அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,

முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்

மூதா தைவந் தாங்கு

விருந்தே காமம் பெருந்தோ ளோயே

என்ற குறுந்தொகைப் (204 – குறிஞ்சித் திணை – மிளைப் பெருங்கந்தன்) பாட்டு ஒன்று ‘ ‘காடு ‘ ‘ புதினத்துக்குக் கட்டியம் கூறுவதாக முன்வைக்கப்படுகிறது.

காமம் காமம் என்று சொல்கிறார்கள். காமம் என்பது அணங்கும் அன்று; பிணியும் அன்று. உள்ளும்போதெல்லாம் இன்பம் தருவதுதான் காமம். எதைப்போல என்றால், பல்லில்லாத ஒரு கிழட்டுப் பசு, தான் வழக்கமாக மேய்ந்து பழகிய, தனக்குப் புதிதல்லாத மேட்டுநிலத்தில் தழைத்துக் கிடக்கிற முற்றா இளம்புல்லை, நாவால் தடவி இன்புற்றாற்போல.

காடு காமத்தின் குறியீடு. கதைத் தலைவனின் பார்வையில் விரிகிற இப்புதினத்தின் எல்லாக் கதைமாந்தர்களும்–அவர்கள் குறிஞ்சி நிலத்துக்கு உரியவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்–குறிஞ்சித் திணைக்குரிய ஒழுக்கமான ‘ ‘கூடலும் கூடல் நிமித்தமும்பற்றி ‘ ‘ இயங்குகிறவர்களாகவே காட்சிப்படுகிறார்கள்.

பொதுவில், காமம் என்பது தலைமறைவு வாழ்க்கை வாழுமாறு சபிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியச் சமயங்களில் காமத்தைக் கடுமையாகக் கண்டித்த துறவு நெறி பெளத்தம். அறிவைத் தேடுதல் என்பதே மையமானதாகவும் முதன்மையானதாகவும் இருக்க, அறிவை அரைக்கணத்துக்கேனும் அழித்துவிடுகிற காமம் வெறுப்புக்குரியதாகிறது. அறிவை முதன்மைப்படுத்திக் கடவுளை மெளனத்தால் புறக்கணித்துவிடுகிற பெளத்தத்தில் தன்னை மறத்தலும் தன்னை இழத்தலும் குற்றங்கள்.

பெளத்தத்தின் அடியொற்றிப் பின்வந்த சமய மரபுகள் எல்லாமும் காமம்பற்றிய தங்கள் கண்டனத்தை வெளிப்படையாக அல்லாவிட்டாலும் மறைமுகமாகவேனும் பதிவு செய்தன. காமத்தை மறுதலிப்பது இயற்கைக்கு முரணானது. குறிப்பாக ஆவிடைக்குள்ளான இலிங்கத்தைத் தன் வழிபாட்டுக் குறியீடாகக் கொண்டிருக்கிற தமிழ்ச் சைவ மரபும்கூட கமுக்கமாகக் காமத்தை மறுதலிக்க முயன்றது என்பதும் யோகநிட்_அ8டயில் ஆழ்ந்திருந்த சிவனை விழிப்பிக்கவும் கிளர்த்தவும் முயன்ற மன்மதன் சிவனின் நுதல்விழி நெருப்பில் வெந்துபோனான் என்று கதை சமைக்கத் தொடங்கிற்று என்பதும் அதிசயம்தான்.

முற்றத் துறக்கும் துறவு என்பது தமிழ்மரபின் தளத்தில் உண்டாக்கக்கூடிய எதிர்ப்புக் கொப்புளங்களை முன்னறிந்த தமிழ்ச் சைவம் தந்திர மரபுகளில் இருந்து சில கோட்பாடுகளைக் கடன்பெற்று, விந்து விடாப் புணர்ச்சி என்ற பெயரில் காமத்தை அனுமதிப்பதுபோல் அனுமதிக்கிறது.

காமம் என்பது இருவகைப் பயன்கள் உள்ளது. ஒன்று இன்பம்; மற்றது இனப்பெருக்கம். இரண்டில் எது நிகழவேண்டுமானாலும் விந்து வெளியேற்றம் வேண்டாமா ? என்கிற கேள்விகளெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.

தலைவன் தாளைத் தலைப்பட வேண்டுமெனில் தன்னை மறக்க வேண்டும். அகங்காரம் அழிய வேண்டும். தான் என்பது கரைந்து போய்விட வேண்டும். இது காமத்தைத் தவிர வேறு எதில் இவ்வளவு துல்லியமாக நிகழ்கிறது ? ஆகையால் காமத்தைப் புறக்கணிக்க எந்த நியாயமுமில்லை. வேண்டுமென்றால் கால அளவு நீட்டிப்பைப்பற்றிப் பேசலாம். காமமே வேண்டாம் என்று பேச வேண்டாம் என்பது ஒரு பார்வை.

காமம் என்பது கடவுளிடமிருந்து/மெய்யறிவிலிருந்து மனிதனைத் தூர விலக்குவது என்ற பார்வை ஒன்றாக, காமம் என்பது கடவுளின் முகவரி என்பது மற்றொன்றாகிறது. இவற்றால், காமத்தை மறுத்துக் கடவுளைத் தேடுதல், காமத்தைக் கடந்து கடவுளைத் தேடுதல், காமத்தின் வழியாகக் கடவுளைத் தேடுதல் என்று மூன்று அமையலாம்.

கடவுளைத் தேடுவதற்கானது காமம்–உடன்பாட்டு நிலையிலோ அல்லது எதிர்மறை நிலையிலோ–என்ற கடவுள் மையப் பார்வையைப் புறந்தள்ளிவிட்டு, ஊறித்திளைக்கவும் திகட்டிக் குமட்டவுமான தன்னியல்பான காமம் உண்டு என்றும் ஒன்று அமையலாம்.

இவ்வெல்லாவற்றின் இயல்புகளுக்கும் இயல்புக்கேடுகளுக்கும் களம் அமைக்கிறது ஜெயமோகனின் காடு.

காட்டின் கதைமாந்தர்கள் காமத்தின் பல்வேறு வண்ணங்களைத் தங்கள்மேல் பூசித் திரிகிறார்கள். எதிர்ப்பாலின உறவு தொடங்கித் தற்பாலின உறவுவரை காமத்தின் எல்லா வகைப்பாடுகளும் விரிகின்றன. சமயங்களால் சபிக்கப்பட்டுவிட்டது காமம்; அந்தச் சாபம் சமூகத்தாலும் வழிமொழியப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் காமம்பற்றி இவ்வளவு உரக்கப் பேசுகிற மற்றொரு தமிழ்ப்புதினம் உண்டெட் ட்று தோன்றவில்லை.

தி. ஜானகிராமனின் புதினங்களுக்கும் காமம் மையமாகிறது. ஆனால் அவற்றில் மையக் கதைமாந்தர்கள் மட்டும் காமச் சுழிப்பில் அகப்பட்டு நிற்கின்றனரேயன்றி, எல்லோருமன்று. ஆனால் காடு காமத்தையே கருப்பொருளாகக் கொண்டு கதைமாந்தர்களையெல்லாம் அதன் ஊடாக இயங்கும் கருவிகளாக்குகிறது. காமத்தை ஜானகிராமன்போல அடிக்குரல் கிசுகிசுப்பாகப் பேசாமல் ஓலமாக்குகிறது.

தனக்கேயுரிய அகத்துறை மரபை தற்காலத் தமிழ் இலக்கிய ஆக்கங்கள் வசக்கேடாகத் தொலைத்துவிட்ட நிலையில் அதை மீட்டெடுத்து மற்றொரு சுருதியில் மீட்டுகிறது காடு.

பன்னூறு ஆண்டுகளுக்கு முன் பதிவில் ஏறிய அதே குறிஞ்சித் திணை; தலைவியாக நீலி என்கிற குறவஞ்சி. சங்கப் பாடல்களில் அவை என்ன வீச்சோடு விரிந்தனவோ அதே வீச்சோடு காட்டில் வேறு தேர்ந்த சொற்களில் விரிகின்றன.

காமம் என்பது அல்லது காமம் சார்ந்து உண்டாகிற நிறைவு என்பது உடம்பின்பாற்பட்டதா அன்றி மனத்தின்பாற்பட்டதா ? என்ற கேள்வி இப்புதினம் நெடுகிலும் ஊடாடிக்கொண்டே இருக்கிறது.

காமம் என்பது பொதுவில் புறத்தில் ஊற்றெடுத்து அகத்தில் காட்டாறாக உருப்பெருகிக் கல்பொருதிரங்கிப் பிறகு புறத்தில் வடிவது என்பது இயல்பானது. காமத்தில் உடலும் மனமும் பெறுகிற இடங்கள் சமமானவை. உடல் மட்டுமே சார்ந்த காமம் வெறும் விலங்கியல் நிகழ்வாக, நிரக்காமல் அற்றுத் தீர்ந்துவிடும். மனம் மட்டுமேயான காமம் வெறும் புறத்தெறிதலாகப் (ப்ரொஜெcடிஒன்) போய்விடும். உடலுக்காக மனம் உருப்

‘அ6பருக்கும்போது காமத்தின் முன்னொட்டு, பின்னொட்டுக்களுடன் உச்சம் தொட்டுப் பத்திரமாக தரையிறங்க வாய்ப்பிருக்கிறது.

உடலை விலக்கிய காமம் என்பது தெய்வீகமாக உருவகப்படுத்தப்பட்டு அதைநோக்கி மாந்தர்கள் உந்தப்படுகிற நிலை ஒன்று இருக்கிறது. காடு உடலில் தொடங்கி உள்ளத்தில் விரிந்து பிறகு அது மீண்டும் உடலில் முடிந்துவிடாமல் அப்படியே மேல்நோக்கிப் போய்விட வேண்டும் என்கிற கருத்தை மையம் கொண்டு இயங்குகிறது.

‘ ‘காடு திசைகள் இல்லாதது. ஏனெனில் மொத்தக் காடுமே வானம் என்ற ஒரே திசையை நோக்கி எழுந்து கொண்டிருப்பது. …அங்கே பக்கவாட்டில் திசைதேடும் மனிதன் அபத்தமான ஓர் அன்னியன் ‘ ‘ (ப. 59); ‘ ‘காட்டில நாம போறதுதான் முக்கியம். போற இடமும் காடுதான் போய்ச்சேர்ற இடமும் காடுதான் ‘ ‘ (ப. 245) என்றெல்லாம் சொல்லப்படும்போது, இது புறத்தில் அடர்ந்து கிடக்கிற காட்டுக்கு மட்டும் சொல்லப்பட்டதாக_f2 தெரியவில்லை. காமத்துக்கும் அதுவே உருவகிக்கப்படுவதாகவே தோன்றுகிறது.

காட்டின் புறவிளிம்புகளில் சுற்றி வருகிறவர்களைப்பற்றிப் பேச்சில்லை. ஆனால் உட்காட்டுக்குள் நுழைந்துவிட்டால் பிறகு வெளிவருவது என்பது கிடையாது. அங்கே மேல்நோக்கிய மீட்சி மட்டுமே இயலக்கூடியது. நீலியின் அண்மை தந்த இன்பம் கிரிதரனை அவன் அதுவரை அறிந்திராத பரவசத்தின் அபாயகரமான எல்லைகளில் உலவவிட்டதாக எழுதப்படும்போது அவன் இறைமையைத் தொட்டுவிடுகிற உ யரத்துக்குச் சென்றுவிட்டதாகத் தொனிக்கிறது.

நிரம்ப அருமையான சித்திரிப்பு–காமத்திலிருந்து கடவுளுக்கு.

இந்தக் கருதுகோளை வளர்த்தெடுத்து வடிவம் கொடுப்பவராக வருகிறார் அய்யர். காமத்தைக் குறுந்தொகையின் வாயிலாக மட்டுமின்றிக் ‘கருங்கல் கொழுக்கட்டையான ‘ சிவஞானபோதத்தின் வாயிலாகவும்கூட அடையாளம் காணத் தெரிந்தவர் அவர். ஒரு கட்டத்தில் ஆன்றவிந்து அடங்கிச் சாமியாராகப் பிறரால் அடையாளம் காணப்படுகிற நிலையை எய்திவிட்ட அய்யரிடம் கிரிதரன் கேட்கிறான்: ‘ ‘இ_f2தனை வருஷத்தில நீங்க அடைஞ்சது என்ன ? ‘ ‘ ‘ ‘அப்படிக் கேட்டா, முன்ன ஏக்கம் மட்டும்தான் இருந்தது. இப்ப அது எதுக்கான ஏக்கம்னு தெளிவா தெரியறது. அதான் சொல்ல முடியும். ‘ ‘ ‘ ‘எதுக்கான ஏக்கம் ? ‘ ‘ ‘ ‘அதை எப்டி சொல்றது உனக்கு … லீவ் இட் பிளீஸ்… ‘ ‘

அய்யர் என்ற கதைமாந்தரின் வாயிலாக ஜெயமோகன் குரலே கேட்கிறது. காமம் என்பது வெறும் களியோ அல்லது வெறுத்துப் புறந்தள்ளத் தக்க அசிங்கமோ அன்று; காமம் உருவாக்குகிற உள் ஏக்கம் கடவுளை அடைவதற்கான ஏக்கமாக மேனிலையாக்கம் பெறவேண்டும் என்பதுதான் செய்தி.

அந்த நிலையை அடையும் தகுதி உள்ளவனாக கிரிதரன் அடையாளம் காணப்படுகிறான். அவனுடைய காமத்திலிருந்து கடவுளுக்கான பயணம் எதிலிருந்து, எதை நோக்கி என்ற ஆரம்ப கேள்விகளும் வரையறைகளும் இல்லாமல் தற்செயலாகத் தொடங்குகிறது. அவன் தன் பயணத்தில் சில மன அனுபவங்களைப் பெறக் காடும் நீலியும் துணைநிற்கிறார்கள். காமம்பற்றிய/காடுபற்றிய அவனுடைய ஆரம்ப அச்சங்கள் குட்டப் பன் போன்ற சிலரால் போக்கடிக்கப்படுகின்றன. பிறகு காமம்பற்றி அவன் கொள்ளும் தெளிவுகளுக்கு மெய்யியல் விளக்கம் தர அய்யர்.

காமம் உடல்வழியாக இயங்குவதற்கான தளம் குட்டப்பனைத் தலைமையாகக் கொண்டு விரிக்கப்படுகிறது. காமம் மனம்வழியாக விரிவதற்கான தளம் அய்யர் வாயிலாக விரிக்கப்படுகிறது.

உடலுக்கு அப்பாற்பட்டுக் காமம் எந்த நோக்கமுமில்லாதது என்பது குட்டப்பன் கட்சி. அவன் அய்யரைக் கேலி பேசுகிறான்: ‘ ‘அவருக்கு தடவினா போரும். பேட்டரி வீக்கு. ‘ ‘

உடல்வழிப்பட்ட காமம் எல்லைக்குட்பட்டது என்பது அய்யரின் கட்சி. உடல்வழிப்பட்ட காமம் தனிப்பட்ட காமமாகுமேயன்றித் தனிமுதற் காமம் ஆகாது. அவர் சொல்கிறார்: ‘ ‘படுக்க வைக்கிறவனுக்கு பத்து பொண்ணு. பாத்து ரசிக்கிறவனுக்கு பத்தாயிரம் பொண்ணு. ‘ ‘

தன் கருத்தில் அமைந்திருக்கிற இலட்சிய வடிவங்களைப் புறநிலையில் பார்க்கும்போது உண்டாகிற இன்பம் அவருக்குப் போதுமானது. இது காமத்தைக் கருத்துமுதலாக்கி அதற்குப் பிளேட்டோவியச் சாயம் பூசுகிற முயற்சி. பருப்பொருள்நிலையில் எந்த ஒன்றும் சிதைவுக்கு ஆளாகும். சிதைவுக்குள்ளாகக்கூடிய அற்பத்துக்கு இத்தனை பாடுபடுவானேன் ? கருத்துநிலையில் இருக்கிற எந்த ஒன்றும் அழிவிற்கு அப்பால்   7பாய்விடுகிறது. அது பரம்பொருளாகிவிடுகிறது. அதற்கு ஆக்கமும் இல்லை, அழிவும் இல்லை. இந்த அழியாமையை நோக்கியதாகவே பயணம் தொடரவேண்டும்.

புறநிலைக் காமத்துக்கும் அகநிலைக் காமத்துக்கும் நிகழ்ந்திருக்கக்கூடிய கருத்துமோதல், காமம்பற்றிப் பகிரங்கமாகப் பேசுவது என்று தீர்மானித்துக்கொண்டுவிட்ட இந்தப் புதினத்தில் இன்னும் துலக்கமாகவும் வெளிப்படவும் நிகழாமல் போனது ஓர் ஏமாற்றம்தான்.

கருத்துமுதல் இன்பநிலைபற்றி ஜெயமோகனுக்கு ஓர் அகச்சாய்வு இருக்கிறது. கிரிதரனை அத்தகைய கருத்துமுதல் இன்பநிலைக்கே ஆட்படுத்துகிறார் ஜெயமோகன். கூடுவதற்கான மனக்கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய காடு. கூதிர்காலம். காட்டுவிலங்குகள் மதம் ஏறித் தடுமாறுகிற காலம். கிரிதரனும் அந்தத் தடுமாற்றங்கள் எல்லாவற்றையும் அடைகிறான். அவனுக்கு நீலியின் அண்மை வாய்த்திருந்தும் அவளிடம் ேஊ எாய இவனுக்குச் சம்மதமில்லை. அது அவளை வெறும் உடம்பாகப் பார்த்ததாக ஆகிவிடும் என்று வெறும் ரசனை நிலையிலேயே நின்று மீள்கிறான்.

தி. ஜானகிராமனின் மோகமுள்ளில் காரியம் முடிந்தபிறகு பாபுவிடம் சமுனா கேட்கிற ‘ ‘இதற்குத்தானா ‘ ‘ என்ற கேள்வியின் தொனியே இங்கும். புறநிலைப்படவா காமம் ? ‘ ‘இதற்கன்று, காமம் என்பது உடற்சார்பற்றது ‘ ‘ என்ற தீர்மானம் கிரிதரனிடம் கெட்டிப்பட்டு நிற்கிறது. அய்யர் நீலியை வண்ணிக்கும்போது அவனுக்கு எரிச்சல் உண்டாகக் காரணம் அதுதான்: அவர் அவளை உடம்பாகப் பார்க்கிறார். அவ ள் உடம்புதான் என்றாகிவிட்டால், அவள் வெறுமனே உண்டும் உடுத்தும் உரைத்தும் பெற்றும் தளர்ந்தும் மேல்வரும் மூப்புமாகி நாளும் நாள் சாகின்றவளாகிவிடுவாளே!

குறிஞ்சித் திணையின் அடையாளமாகச் சொல்லப்படும் குறிஞ்சிப்பூவைப்பற்றி இலக்கிய அறிமுகம் மட்டுமே கொண்டிருக்கும் கிரிதரனுக்கு மலையுச்சியில் நீலி குறிஞ்சிப் பூவைக் காட்டும்போது பெருத்த ஏமாற்றம் உண்டாகிறது. இதுவா குறிஞ்சிப்பூ ? அவனுடைய மனம் இருப்புக்கொள்ளாமல் நெளிகிறது. ‘ ‘காட்டையே ஒற்றைப் பெரும்பூவாக மாற்றும் வேங்கை, தீப்பற்றி எரியும் காந்தள், பொன் சொரியு ம் கொன்றை… எத்தனை மலர்கள். மாறாப் பசுமைக் காடு என்பது பூக்களின் பேருலகம். இந்த நிலத்துக்கு அடையாளமாக இந்த அபத்தமான பூவை ஏன் கற்பனை செய்தார்கள் ? ஆனால் மொத்த சங்க இலக்கியப் பரப்பிலும் குறிஞ்சிப்பூ பற்றி வர்ணனைகளே இல்லை என்பது நினைவுக்கு வந்தது. ‘ ‘

மனம் கற்பனையாகச் சித்திரித்து வைத்திருந்தது புறத்தில் அப்பட்டமாகும்போது ஏமாற்றத்தால் அதிர்வும் குலைவும் உண்டாகின்றன. மனத்தில் இருப்பது புறத்தில் வரவே வேண்டாம் என்ற நிலையை எடுக்கவும் தூண்டுகிறது.

இந்த அனுபவங்களாளெல்லாம் கிரிதரனுடைய காமமும் அய்யருடைய கருத்துமுதல்வாதக் காமமாகவே முதிர்கிறது. அவனே தருகிற ஒப்புதல் வாக்குமூலம்: ‘ ‘இப்ப எனக்கு வயசு நாப்பத்திரண்டு. என் மனைவிகூட எனக்கு உறவே இல்லை. அவ எனக்கு பொண்ணாகவே படறதில்லை. ஆனா ஓயாம சினிமா பாக்கிறேன். ஒவ்வொரு கட்டத்திலயும் ஒரு நடிகை மேல பைத்தியமா இருக்கேன். அவ படங்களை வெட்டி ஒட்டி வைச்சு, பாத்_ட்0… ‘ ‘

அய்யரின் கொள்கைக்கு வந்து சேர்ந்துவிட்டான்: ‘ ‘படுக்க வைக்கிறவனுக்கு பத்து பொண்ணு. பாத்து ரசிக்கிறவனுக்கு பத்தாயிரம் பொண்ணு. ‘ ‘

அய்யரைக் கேட்கிறான்: ‘ ‘உங்களுக்கு அந்த விருந்து இருக்கா ? ‘ ‘ ‘ ‘கண்டிப்பா. ஆனா நான் பதற்றப் படறதில்லை. பரிதவிக்கிறதும் இல்லை. மனசையும் காட்டையும் வேடிக்கை பாத்துட்டு உக்காந்திருக்கேன்… ‘ ‘

வெறும் சாட்சியாக எந்தப் பதற்றமும் இல்லாமல் புறநிகழ்வுகளோடுகூட அகநிகழ்வுகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருத்தல் என்ற செயலற்ற நிலைக்குக் காமம் வழிநடத்தப்படுகிறது.

காமத்துக்குத் தமிழ் மரபில் கருத்துமுதல்வாத மையம் வழங்கப் படுவதில்லை. அப்படி வழங்க முற்படுவது ஜெயமோகனின் முயற்சி. காமத்தின் செவ்வி தலைப்படுவது என்பது உடலையும் உடன்பட்டுத் தலைப்படும் ஒன்றாகச் சித்திரிக்கப்படுகிறதேயன்றி உடலைப் புறந்தள்ளித் தலைப்படும் ஒன்றாகச் சித்திரிக்கப்படுவதில்லை.

அகத்துறை மரபை அத்வைத மரபாக நீட்ட முயல்கிறார் ஜெயமோகன் என்பதுதான் இப்புதினத்தின் மாபெரும் வீச்சு. அகத்துறை மரபை அத்வைத மரபாக நீட்ட முயலவேண்டுமா என்றும் கேள்வி.

இந்திய மெய்யியல் மரபு பொதுவில் மூன்றாக வகைப்படுத்தத் தக்கது: புறத்தன எல்லாம் பொய்; அகத்தது மட்டுமே மெய் என்ற நிலைபாடு. அகத்தது பொய்; புறத்தன மட்டுமே மெய் என்ற நிலைபாடு. அகத்தனவும் மெய்; புறத்தனவும் மெய் என்ற நிலைபாடு.

தமிழ் மரபு அகம், புறம் என்ற இரண்டையுமே மெய்யாக் காண்கின்ற இயல்புடையது.

ஜெயமோகன் ஒரு கலப்பினத்தை உருவாக்கும் முயற்சியை இப்புதினத்தில் மேற்கொள்கிறார். இதில் காமத்தைப் பேசுபொருளாகக் கொண்டு அவர் எடுக்கிற நிலைபாடு புறத்தன எல்லாம் பொய் என்கிற முற்றான கருத்துமுதல்வாத நிலைபாடும் அன்று. அகத்தன எல்லாம் பொய் என்ற பொருள்முதல்வாத நிலைபாடும் அன்று. புறத்தில் தொடங்கி அகத்துக்கு என்ற நடுப்பட்ட நிலைபாடு. இந்த இடைப்பட்ட நிலைபாட்ை ட எடுத்துவிட்ட நிலையில், அந்த நிலைபாட்டுக்கு நீதி வழங்குகிற வகையில் அகத்தையும் புறத்தையும் சம அளவில் வைக்காமல், தனது சொந்தச் சார்புணர்ச்சி காரணமாக, அகம் வைக்கப்பட்டிருக்கிற தட்டை எடை மிக்கதாக்கி சமத்தன்மையைப் போக்கிவிட்டார் என்று ஒரு குற்றச்சாட்டை அவர்மேல் வைக்கலாம்.

காமத்தைப்பற்றிப் பேசும்போது புறநிலைக்காமத்தைப் பல்வேறு கதைமாந்தர்கள் வாயிலாக விரிவாகவே பேசுகிறார் ஜெயமோகன். குட்டப்பன், குரிசு, கிரிதரனின் மாமா போன்ற பலர் அதன் படியாட்களாக (பிரதிநிதிகளாக) வலுவாக அந்தக் கட்சியைக் கொண்டு செலுத்த முயல்கின்றனர் எனினும் அகநிலைக்காமத்தை அய்யர், கிரிதரன் ஆகிய இருவருடன் ஜெயமோகனும் பேசக் கிளம்பிவிடுவத  1ல் அந்தத் தட்டு அதிக எடையுள்ளதாகச் சாய்கிறது.

புறநிலைக் காமத்தின் அடையாளமாக வருகிற குட்டப்பன் கடவுளை அடையக் காமம் வழி என்ற கருத்து உடையவன் அல்லன். அவனுடைய வாழ்வில் காமம் என்பது இன்றியமையாத ஒரு பகுதி. காமம் என்பது அவனுக்குக் குடித்துவிட்டுக் கழிக்கும் குவளை (டிபொசப்லெ cஉப்). ஆனால் கிறித்தவனாகிய குரிசுக்கோ காமம் என்பது பாவம். சாத்தானை அழைப்பதற்கான நிலைவிளி. குறி என்பது சிறுநீர் கழிக்கவும் ரொம்பப் பொறுக்க முடியாமல் போகும்போது பிழிந்துவிடுவதற்காகவும் மட்டுமே வைக்கப்பட்டிருக்கிறது என்ற கருத்துடையவன். அவனுடைய வாழ்வில் ஒரு தலைகீழ் மாற்றம் வருகிறது. காமம் என்பது சாத்தானாக வெறுக்கப்பட்ட நிலை மாறி, நேசிக்கத்தக்கதாக ஒரு கட்டத்தில் ஆகிறது அவனுக்கு. அவன் சொல்கிறான்: ‘ ‘சாத்தானை வெறுக்காதிய. சாத்தான் கிறிஸ்துவுக்க தூதனாக்கும். நாமெல்லாம் பாவத்தில பிறந்த பிள்ளிய. ந ாம சாத்தானைக் கண்ட பிறவுதான் யேசுவை காண முடியும்…. சாத்தான் சொன்னது சினேகத்தப் பத்தியாக்கும் ஏமானே. கிறிஸ்து நம்மகிட்டே பேசுதாரு. ஆனா நாம அவரிட்ட பேசாம நமக்கு ரெட்சிப்பு இல்லை. எப்பிடி அவரிட்ட நாம பேச முடியும் ? அவருக்க பாஷை என்ன ? தமிழா, இங்கிலீஷா, ஹீப்ருவா, லத்தீனா ? சினேகமாக்கும் அவருக்க பாஷை. நம்ம சகோதரனிட்ட நாம பேசுத பாஷை. நோயில கிடக்குத ஒ_ட்5 ஜீவனிட்ட கையப் பிடிச்சு கண்ணீரோட நாம் பேசுத பாஷை, அதாக்கும். ‘ ‘

இந்த இடம் தராசின் தட்டுக்களைச் சமமாக்குவதற்கு நல்ல வாய்ப்புள்ள இடம். ஆனால் அது போதுமான அளவு பயன்படுத்திக்கொள்ளப் படாமல் விடப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.

ஓரினப் புணர்ச்சிப் பொணைபாம்புகளாகக் காட்டப்படும் ஆபேல்-ராபி, தினவு அடங்கமாட்டாமல் எருமையைப் புணர்ந்த இரும்பன் ஏமான் என்று பல்வேறு கதைமாந்தர்கள் வாயிலாகக் காமத்தை அதன் பல்வேறு வண்ணங்களொடு இவ்வளவு உரக்கப் பேசியிருப்பதும், காமத்தின்மேல் உண்டாக்கப்பட்டுவிட்ட பொக்குகளை மெய்யியற் சாந்து கொண்டு பூசி நிரப்பியிருப்பதும் ஐயமில்லாமல் வெற்றிகள்தாம்.

பெண்கள் காமத்தில் கொள்கிற ஈடுபாடும் முற்றிய வெறியும் வெளிப்படப் பேசப்படுகிறது. பெண் காமத்தின் வீச்சாட்டியமான வடிவமாக வனநீலி கதை ஒன்று நாட்டார் மரபுக் கதையாகக் குட்டப்பனால் சொல்லப்படுகிறது. தீராத காமப்பசி கொண்ட இயக்கியான வனநீலி காட்டின் காஞ்சிர மரம் ஒன்றில் ஆணியடித்துக் கட்டி வைக்கப்பட்டிருக்கிறாள் என்பது கடலை இடம்பெயர்த்து நிரப்பினாலும் கெ  1ள்ளாமல் மேலும் கேட்கிற பெண்ணின் காமத்தைக் கட்டிறுக்கி வைக்கும் குறியீடாக அமைகிறது.

கிரிதரன் காமத்தை அகவயமான காமமாக மாற்றுவதில் இந்தக் கதைக்குப் பெரும் பங்குண்டு. பெண், ‘இன்னும் தா இன்னும் தா ‘ என்று கேட்கிற இயக்கி. அவளை நிறைவிக்கத் தான் போதுமானவன் அல்லன் என்ற குறையுணர்வு அவனுடைய நனவிலி மனத்தில் இயங்கிக்கொண்டே இருக்கிறது. ஆகையினால் உடம்பின் வழியான காமம்பற்றிய அவனுடைய கவனம் போதுமானதாக இல்லாமல் போய்விடுகிறது. அவனுக்கு நேர்க  2ற முதல் பெண்ணனுபவத்திலும் சரி, அவனுக்கு மணம் செய்துவைக்கப்பட்ட பெண்டாட்டியுடனான முதல் உறவிலும் சரி, அவன் கையாளப்படுபவனாக இருக்கிறானேயன்றிக் கையாள்பவனாக இல்லை.

உடம்பின் வழியான புறநிலைக் காமம் என்பது பெண்ணின் காமத்தீயில் தன்னை ஆகுதியாக எரித்துக்கொள்ளுதல் என்று அவனுக்குத் தோன்றிவிட்டதன் விளைவாகவே அவன் தன் காதலி நீலியைக்கூடத் தன் உடல்வழியாக அணுகாமல் தன் மனம் வழியாகவே அணுகுகின்றான். மனக்காமத்துக்குத் தோல்வி ஏது ?

வனநீலி என்ற இயக்கியின் சமூக வடிவமாக கிரிதரனுடைய மாமி. அடங்காத காமம். மாமா போதாமல் வேலைக்காரனை வளைத்துப் பின் தன் மகளுடைய கணவனான கிரிதரனையும் வளைக்க முயன்று வெல்ல முடியாமல் எவனோ ஓர் இளவட்டப் பயலை இழுத்துக்கொண்டு ஊரைவிட்டு ஓடிப்போகிறவள்.

தனக்குரிய சாப்பாடு எப்படித் தனக்குரிய சங்கதியோ அப்படியே காமமும் என்ற கருத்தியல் கொண்ட சினேகம்மை. கற்பு நெறி, கணவனுக்கு நேர்ச்சை என்பதெல்லாம் அவளுக்குப் பொருட்டில்லை. அவளுக்கு எந்த ஆணைப் பார்த்தாலும் அவனுடைய குறியிலேயே கவனம் போகும்.

மனிதர்களை ஆண்குறிகளாகவும் பெண்குறிகளாகவுமே பார்த்து ‘அருள்வாக்கு ‘ வழங்குகிற, மனம் குலைந்துபோன அனந்தலட்சுமிப் பாட்டி.

ஊரில் உள்ள எல்லாரைப்பற்றியுமான காமக் கதைகளைக் கூட்டியும் குறைத்தும் அவிழ்த்துவிட்டு அன்றையச் சோற்றுப்பாட்டுக்குக் காசு தேற்றிக்கொண்டு போகிற நாணம்மை பணிக்கத்தி.

அவளுக்குக் காசு கொடுத்தாவது காமக் கதைகள் கேட்க விருப்பம் கொள்கிற ஊர்ப்பெரிசுகள்.

வாய்க்கு விளங்காத ஒரு பெண்டாட்டியைக் கைப்பிடிக்க நேர்ந்துவிட்ட உமட்டலில் கிரிதரன் வாடிக்கிடக்கும்போது அவனுக்கு உலகியல் பார்வையோடு உபதேசம் செய்கிற போத்தி ( ‘ ‘சொல்லுயத கேளு. செரி, நல்ல சரக்கா பாத்து கெட்டுதே. அது ஒரு குட்டிப் போட்டம் பிறவு சொறிப்பட்டி மாதிரி ஆவுது. என்னடே செய்வே ? விட்டுப் போடுவியா ? எனக்கு சொந்த அனுபவத்திலல சொல்லுதேன் கேட்டுக்கோ. அ ழகில ஒண்ணும் இல்ல. சொல்லப்போனா அழகு எண்ணு ஒண்ணும் உலகத்தில இல்ல. செம்பரத்திப்பூவு அழகுதானே ? பன்னிக்க சூத்து ? ஆமடே, ரெண்டும் பாக்க ஒரே நெறம், ஒரே ஷேப்பு. அழகுங்கியது நம்ம மனசாக்கும் பாத்துக்க. பிடிச்சிருந்தா அழகு. பிடிக்காட்டி அசிங்கம். சொன்னா கேளு. ‘ ‘)

அதே காரணம்பற்றி அதே உலகியல் பார்வையோடு பேசுகிற கிரிதரனின் அம்மா ( ‘ ‘என்னலே காரியம் ? பெண்ணு பிடிக்கேல்ல இல்லியா ? உனக்க முகம் கஷாயம் குடிக்கியது மாதிரி இருக்குதக் கண்டா தெரியாதா ? காசுள்ள பெண்ணு வேணுமானா அப்பிடித்தான் இருப்பா. காசும் வேணும் அழகும் வேணுமானா உனக்கென்ன கோப்புலே இருக்கு ? … லேய் மக்கா, காசிருந்தா ஆயிரம் சுந்தரிய வச்சுகிடலாம் பாத்துக்க… ‘ ‘)

பல்வேறு வண்ணங்கள் கொண்ட ஊடுகளையும் பாவுகளையும் கொண்டு ஒரே வண்ணத்தில் சேலை நெய்ய முடியுமா ? வித்தக நெசவாளனால் முடியும். காடு.

கிரிதரனுக்குள் காமம் என்று ஒரு காடு படர்ந்து விரிந்து கொண்டிருக்கிறது. அதில் சில உச்சங்களை அவன் அடைகிறான். கிரிதரன் கால்பாவி நடக்கிற களமாகக் காடு அவனுக்குப் புறத்திலும் விரிந்து கிடக்கிறது. அங்கே அவனுடைய விலங்குக் குறியீடுகளாக ஒரு மிளாவும் ஒரு யானையும். அகத்திலும் புறத்திலும் காடுபற்றிய தெளிவான அறிமுகமில்லாத இளம்பாதனாக அவன் காட்டுக்குள் நுழையும்போது 0 காட்டின் ஏனைய விலங்குகளுக்கு ஈடுகொடுக்கத் திறனில்லாத எளிய உயிராகிய மிளா அறிமுகமாகிறது. அவன் அகத்தும் புறத்தும் காடு குறித்த தேர்ச்சி கொள்ளும்போது மிளா விலக, யானை ஒன்று அதனைப் பதிலீடு செய்கிறது. இது ஓர் அற்புதமான வரைவு. இது ஜெயமோகன் உச்சத்தைத் தொடும் இடம்.

மேஸ்திரி ரெசாலத்துக்குக் காட்டுக்குள் ஒரு தேவாங்கின்மேல் பற்றுண்டாகக் காரணம் புரியாமல் புதினத்தைத் தொடர்ந்து படித்துச் செல்கிறோம். எதிர்பாராதவிதமாக அந்தப் பற்றுக்கான காரணம் அவிழ்கிறபோது இந்த எழுத்தாளனைப்பற்றிப் பெரும் வியப்புண்டாகிறது.

காமம் குறித்த ஒரு புதினம்; அதிலேயும் மலைக்காட்டை, குறிஞ்சித் திணையைக் களமாகக் கொண்ட ஒரு புதினம் மிகப் பெரும் அழகுணர்வோடு சித்திரிக்கப்பட்டாக வேண்டும். களம் கண்முன் வருவதில்தான் இந்த மாதிரியான ஒரு புதினத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. காட்டைத் தானே ஒரு குரங்காக, கரடியாக, செந்நாயாக, ஆனையாக, மனிதனாகச் சுற்றியறிந்தவராக மிகப்பெரும் வல்லமையோடு, ப 1ிக எளிதாகக் காட்டைக் காட்சிப்படுத்துகிறார் ஜெயமோகன்.

அவ்வாறே நீலியைப்பற்றிய வருணனைகளும், கிரிதரனின் பெண்டாட்டி வேணியைப்பற்றிய வருணனைகளும். அழகு, அழகின்மை இரண்டையும் படிக்கிறவன் தனக்கு முன் உணருமாறு வருணிக்கிறார்.

கதைத்தலைவனின் நனவோடை வழியாகத் மலைக்காட்டுக்கும் தரைக்குமாகச் சலிப்பில்லாமல் ஏறி இறங்குகிறது புதினம். எளிதாக ஒரு சிறு காட்சியை அல்லது நிகழ்வைப் பிடித்துக்கொண்டு ஒரு கிளைக் கதைக்குள் அல்லது நிகழ்வுக்குள் நுழைந்து வெளிவருகிறது. ஜெயமோகன்போன்ற கைதேர்ந்த எழுத்தாளருக்கு இதை ஒரு பாராட்டாகச் சொல்ல வெட்கமாக இருக்கிறது.

கிறித்தவ மதம் குட்டப்பன் வாயிலாகக் கடுமையாக நையாண்டி செய்யப்படுகிறது. மேலோட்டப் படிப்பில் ஜெயமோகனின் மேல் சில முத்திரைகள் விழுவதற்கு ஏதுவான இடங்கள் இவை. ஆனால் கிறித்தவத்தின் மீதான் ஜெயமோகனின் திறனாய்வு கிறித்தவம் இயற்கை நிகழ்வான காமத்தைப் பாவமாகக் கருதுகிறது என்பது குறித்ததுதான். காமத்துக்குப் பலியாகும் பெண்கள் வன்முறையாகத் தங்கள்மீது திஊ ட்ிக்கப்படுகிற காமத்திலிருந்து பிழைத்து அடைக்கலம் தேடிக்கொள்கிற இடமாகவும் கிறித்தவம் சித்திரிக்கப்படுகிறது என்பது குறிக்கத் தக்கது.

வன்முறையாகப் பெறப்படும் காமம் அதற்குரிய விலையுடனே பெறப்படுகிறது என்ற அறவியல் பார்வை ஒன்றும் புதினத்தில் இழையோடுகிறது.

குறிஞ்சித் திணைபற்றிய சங்கப் பாடல் தொனிப்புகளை அடிநாதமாக வைத்துக்கொண்டு, அவற்றின் தோள்மேல் ஏறிச் சுற்றுலா வருகிற திறன் ஜெயமோகனுக்கு வாய்த்ததுபோல் இன்னொருவருக்கு வாய்க்கும் என்று தோன்றவில்லை. இரண்டு பயன்கள் உண்டு இந்த முயற்சிக்கு: பழையவற்றை அறியாதவர்களுக்கு அதை வசமாக எடுத்துக்கொடுத்தல், பழையவற்றின் தடம்பிடித்துக்கொண்டு அவற்றுக்கு அப்பால் போக முயலுதல்.

முந்தைய கட்டுரைகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்:சூரியா
அடுத்த கட்டுரைகனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘