வெண்முரசு-மகாபாரதம்

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு

வெண்முரசு நாவல் வரிசையில் முதற்கனலின் முதல் பகுதியான வேள்வி முகம் எதிர்பார்த்ததைவிட அருமையாக இருக்கிறது. விளக்கமுடியா அமானுஷ்யங்களை எளிதாகச் சொல்லிவிட்டுச் செல்கிறீர்கள்.

அந்தப் பதிவைக் குறித்த என் விமர்சனத்தை, http://mahabharatham.arasan.info/2014/01/1.htmlஎன்ற எ னது வலைத்தளச் சுட்டியில் செய்திருக்கிறேன்.

உங்கள் பதிவோடு ஒத்திசையும் எனது பதிவுகளின் சுட்டிகளையும் கொடுத்து எனது முகநூல் நிலைத்தகவலிலும் பகிர்ந்திருக்கிறேன்.

முடிந்தால் ஒவ்வொரு பதிவுக்கும் இந்தப் பதிவில் கொடுத்திருப்பது போலவே ஒரு படத்தையும் கொடுத்தீர்கள் என்றால் மிகவும் அருமையாக இருக்கும். இது போன்ற படத்தைக் கொடுக்கவில்லையெனினும் கோட்டோவியங்களாவது கொடுத்தால் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

பெரும்பணியைச் செய்கிறீர்கள். அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
9543390478
http://mahabharatham.arasan.info
https://www.facebook.com/arulselva.perarasan
https://www.facebook.com/tamilmahabharatham

அன்புள்ள அருள்

நீங்கள் செய்யும் பெரும்பணியுடன் இணையும் ஒரு பணி இது. உங்களுக்கு என் வணக்கம்.

முதல்பகுதி தேவிபாகவதத்துக்கும் கடன்பட்டது. வயக்கவீட்டு விசாலாட்சியம்மாவின் குரலில் இருந்து தொடங்கியிருக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1
அடுத்த கட்டுரைகலைநேர்மையும் கலைஞனின் நேர்மையும்