கிராமணிப்பிள்ளை

கிராமணி என்பது பிள்ளையே என்று அறிந்தேன் என்று பதிவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

தவறான அறிதல் ஐயா.

கிராமணி என்பது வேளாளர் சாதிக் குழுமைத்தைச் சேர்ந்த ஒன்றல்ல. நாடார் சாதிக்குழுமத்தில் ஒன்று. நாடார், கிராமணி, சாணார் என்றே தமிழக அரசின் சாதிப்பட்டியலிலும் இடம் பெற்றிருக்கிறது. தென்தமிழகத்தில் நாடார் என்றால் வட தமிழகம் மற்றும் புதுவையில் கிராமணி. நாடார் அல்லது கிராமணி சாதி நண்பர்களைக் கேட்டாலே அறியலாம். (அல்லது மேட்ரிமோனி தளங்களைக் கண்டாலும் அறியலாம்.) எனினும் பொருளாதாரத்தில் சற்றே வலுப்பெற்ற நாடார் சாதியினர் கிராமணிகளைச் சற்றுக் கீழாகவே கருதுகின்றனர். எண்ணிக்கைச் சிறுபான்மை சாதி கிராமணி. ம.பொ.சி. சற்றே புகழ்பெற்றவர் என்பதால், அந்த சாதியின் அழைப்பிதழ் மற்றும் பேனர்களில் கிராமணி (ம.பொ.சி. சாதி) என்றே குறிப்பிடுகின்றனர். ம.பொ.சி. மட்டுமல்ல, தெ.பொ.மீ., பிரபஞ்சன், கிண்டல் புகழ்பெற்றுள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி முதலானோர்களும் கிராமணி சாதியைச் சேர்ந்தவர்களே. இவர்களையெல்லாம் இப்படிச் சுட்டவேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. கிராமணி சாதி என்பது வேளாளர் சாதிக் குழுமத்தில் ஒன்றல்ல.

தற்போது பல்வேறு சாதிகள் கூட்டம் சேர்ப்பதற்காக பல தலைவர்களையும் தங்களவர்கள் என்று உரிமை பாராட்டுவது போல், மேற்படி சோழிய வெள்ளாளர் குழுமமும் செய்திருக்கிறது. அவ்வளவுதான்.

நன்றி.

யுவபாரதி

அன்புள்ள யுவபாரதி
தெரியும்.
அந்தக்குறிப்பில் அடுத்தவரியை பார்த்தால் அதை நக்கலாகத்தான் சொல்லியிருந்தேன் என்று புரிந்துகொள்வீர்கள்

ஜெ

முந்தைய கட்டுரைராஜநாகங்களும் மண்ணுளிகளும்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா- இந்திரா பார்த்தசாரதி