புறப்பாடு நூலாக…

புறப்பாடு நற்றிணை வெளியீடாக வெளிவந்திருக்கிறது. ஒரு தற்செயல் வேகத்தினால் நான் எழுத ஆரம்பித்த என் வீடுதுறத்தல் அனுபவங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு நாவலுக்குரிய வடிவ ஒருமையுடன் வந்திருப்பதை நூலை பார்க்கையில் உணரமுடிகிறது. இணையத்தில் தொடராக வாசித்தவர்கள்கூட ஒரே நூலாக வாசிக்கையில் முழுமையான ஒரு அனுபவத்தைப்பெறமுடியும்

ஜெ

அன்புள்ள ஜெ

புறப்பாடு முன்னுரை வாசித்தேன். அதில் அஜிதனைப்பற்றிச் சொல்லியிருந்த வரிகளை மனநெகிழ்ச்சியுடன் வாசித்தேன். பிள்ளைகளைப்பற்றிய மனக்குறைகள்தான் எல்லாருக்கும் கடைசியில் எஞ்சுகின்றன. பெரிய மனநிறைவுடன் நீங்கள் சொல்லியிருந்ததை வாசித்தபோது கண்களில் நீர் வந்தது. வாழ்த்துக்கள்

புறப்பாடு எப்போது நூலாக வெளிவரும்?

ராஜப்பா

அன்புள்ள ராஜப்பா

நூல் வெளிவந்துவிட்டது

ஜெ

அன்புள்ள ஜெமோ

புறப்பாடு ஒரு நாவல் வடிவில் எழுதப்பட்டிருக்கலாமோ என்ற நினைப்பு வருகிறது. நாவலாக எழுதியிருந்தால் பல கதாபாத்திரங்களை நீங்கள் மிகப்பெரிதாக ஆக்கியிருப்பீர்கள். அருளப்பசாமி மாதிரி அபூர்வமான கதாபாத்திரங்கள் தமிழுக்கு வந்திருக்கும்

சரவணன்

அன்புள்ள சரவணன்

ஒருபடைப்பு எப்படி ‘வந்ததோ’ அப்படித்தான் அதை எழுதமுடியும். அதை வேறுமாதிரி எழுதலாமென்பது ஒரு ஊகம் மட்டுமே, ‘பெண்ணாகப்பிறந்திருந்தால்’ என்றெல்லாம் பெற்றோர் நினைத்துக்கொள்வதுபோல

இன்னொன்று , உண்மையான கதைமாந்தரை கதாபாத்திரங்களாக ஆக்கமுடியாது. அது அவர்களை செயற்கையாக சித்தரிப்பதாகவே அமையும். கதாபாத்திரங்களில் உண்மையான மனிதர்கள் குடியேறுவது வேறு விஷயம்.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா- இந்திரா பார்த்தசாரதி
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா– பாலசந்திரன் சுள்ளிக்காடு