இந்த தளத்தில் வெளிவந்த புதியவர்களின் கதைகள் முதல் தொகுப்பு நற்றிணை பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழில் எழுதவரும் புதியவர்களின் கதைகளுக்குரிய வெவ்வேறு கதைக்களங்களும் வெவ்வேறு மொழிநடைகளும் ஒரே நூலில் பார்க்கக்கிடைப்பது இந்நூலின் சிறப்பாக இருக்குமென நினைக்கிறேன். சமகாலத் தமிழின் பொதுவான புனைவுத்தன்மைக்கான ஒரு துளிச்சான்றாக இது இருக்கலாம்
நற்றிணை வெளியீடாக வந்துள்ளது இந்நூல்
அன்புள்ள ஜெ
புதியவர்களின் கதைகள் நூலாக வெளிவரும் என்று சொல்லியிருந்தீர்கள். அடுத்த வரிசை புதியவர்களின் கதைகள் வெளிவர வாய்ப்புண்டா?
அன்பு
அன்புள்ள அன்பு
புதியவர்களின் கதைகள்-1 நூலாக வந்துவிட்டது. இரண்டாம்தொகுதி தயாரிப்பில் உள்ளது
அடுத்தவரிசை கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்
ஜெ