இன்று டிசம்பர் 22 அன்று கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நண்பர்கள் கோவையில் ஏற்கனவே கூடிவிட்டனர். வெளிநாடுகளில் இருந்தும் கூட நண்பர்கள் வந்திருக்கிறார்கள். விவாதங்கள் சிரிப்பு என ஓர் இலக்கியத்திருவிழா. சென்ற சில ஆண்டுகளில் இப்படி ஒரு நட்புவிழாவாக இதை ஆக்கமுடிந்ததே முதன்மையான சாதனை என நினைக்கிறேன்
இன்று காலைமுதல் சிறப்பு விருந்தினர்கள் வருகிறார்கள். அனைவரிடமும் விவாதிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
விழா அழைப்பிதழ்
2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
நாள் 22. 12. 2013
இடம் நாணி கலையரங்கம், மணி ஸ்கூல், பாப்பநாயக்கன் பாளையம் கோவை
நேரம் மாலை 6 மணி
நிகழ்ச்சிகள்
விருது வழங்குபவர்: இந்திரா பார்த்தசாரதி
தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் சிறுகதைத்தொகுதி வெளியீடு
வெளியிடுபவர் பாலசந்திரன் சுள்ளிக்காடு
தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் நாவல் வெளியீடு
வெளியிடுபவர் இயக்குநர் பாலா
தெளிவத்தை ஜோசப்புக்கு பொன்னாடைபோர்த்தி கௌரவிப்பவர் சுரேஷ்குமார் இந்திரஜித்
தெளிவத்தை ஜோசப்பின் மனைவியை கௌரவிப்பவர் சுதா ஸ்ரீனிவாசன்
வரவேற்புரை கே.வி.அரங்கசாமி [அமைப்பாளர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்]
சிறப்புரை இந்திரா பார்த்தசாரதி
வாழ்த்துரை இயக்குநர் பாலா
கவிதைபாடுதல் பாலசந்திரன் சுள்ளிக்காடு
பாலசந்திரன் சுள்ளிக்காடு கவிதை தமிழில் ரவி சுப்ரமணியன்
வாழ்த்துரை பாலசந்திரன் சுள்ளிக்காடு
வாழ்த்துரை சுரேஷ்குமார் இந்திரஜித்
வாழ்த்துரை வி சுரேஷ்
வாழ்த்துரை ஜெயமோகன்
ஏற்புரை தெளிவத்தை ஜோசப்
நன்றியுரை செல்வேந்திரன் [விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்காக]
அரங்கில் எழுத்து, நற்றிணை, சொல்புதிது நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும் .21 காலைமுதல் நண்பர்கள் கூடுவார்கள். இலக்கிய அரட்டைகள் நிகழும்.