சுரேஷ்குமார இந்திரஜித் ஓர் உரையாடலில் சொன்னார் ‘ கதை மாதிரி எதாவது எழுதிப்பாக்கலாம்னு நினைக்கிறேன்’ அப்போது அவரது இரண்டு சிறுகதைத்தொகுதிகள் வெளிவந்திருந்தன.
சுரேஷ்குமார இந்திரஜித் தமிழில் வண்ணதாசன், நாஞ்சில்நாடன், பூமணி தலைமுறைக்குப்பின் வந்த படைப்பாளிகளில் முக்கியமானவர். முன்னோடிகள் உருவாக்கிய வடிவங்கள், நம்பிக்கைகள் அனைத்தையும் கடந்துசெல்லமுயன்றவர்களில் ஒருவர். அதில் முக்கியமான இரண்டு விஷயங்கள் கதைக்கட்டு [Plot] உணர்ச்சிகரம்.
சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் சரியான பொருளில் கதைகள் அல்ல. அவற்றுக்கு தொடக்கம் முதிர்வு உச்சம் என்னும் வளர்ச்சிப்பாதை இல்லை. அவை ஓர் அக ஒழுங்கில் கோர்க்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே. ஒரு கதாபாத்திரத்தை அல்லது ஒரு சூழலை மையமாக்கி இந்த தொகுப்பு நிகழ்ந்திருக்கும். ஆனால் அந்த தொகுப்புமுறைக்குப்பின்னால் ஆசிரியர் செல்லும் ஒரு நுண்ணியபயணம் உண்டு. அதுதான் அந்நிகழ்ச்சியோடையை இலக்கியமாக ஆக்குகிறது
உணர்ச்சிகரம் வெளிப்படவேகூடாது என்ற நம்பிக்கை கொண்டவரின் கதைகள் சுரேஷ்குமார இந்திரஜித் எழுதுபவை. ஆகவே ஆசிரியரின் குரல் அடைமொழிகளோ நுண்தகவல்களோ அற்றதாக , செய்தியைச் சொல்லும் பாவனை கொண்டதாக உள்ளது. உரையாடல்கள் கூடுமானவரை சாதாரணமாக உள்ளன. சூழல்சித்தரிப்பு கூட காட்சித்தன்மை குறைந்த தட்டைவிவரணையாக இருக்கும். இத்தனைக்கும் அப்பால் இருக்கும் ஒரு தேடல், தவிப்பு அவற்றை நாம் மீண்டும் நினைக்கவைக்கும்.நம்மில் அக்கதைகள் விரியவைக்கும்
சுரேஷ்குமார இந்திரஜித் நவீனத்துவம் தமிழில் உருவாக்கிய தனித்தன்மைகொண்ட புனைவிலக்கியவாதிகளில் ஒருவர். அவரது கதைகளின் சாரமாக திரண்டுவருவது அக்கதாபாத்திரங்கள் அறியும் தனிமைதான். எந்த தத்துவ விளக்கமும் இல்லாமலேயே இருத்தல் குறித்த சிந்தனைகளை எழுப்புவது அப்புனைவுலகம்
உலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன்
சுரேஷ்குமார இந்திரஜித் பேட்டி
சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்
சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்
சுரேஷ்குமார இந்திரஜித் – கடிதங்கள்
கடித இலக்கியம் –சுரேஷ்குமார இந்திரஜித்
சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடனமங்கை’
==========================================================================
சுரேஷ்குமார இந்திரஜித் பற்றி
சுரேஷ்குமார இந்திரஜித் பேட்டி
சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்
=====================================================
விஷ்ணுபுரம் விருந்தினர்-
1 கே.ஜி சங்கரப்பிள்ளை
2 அமிர்தம் சூரியா
3. யுவன் சந்திரசேகர்
விஷ்ணுபுரம் விருந்தினர் -4, கே.என்.செந்தில்