விழா

20131130_173313(1)

நேற்று,[30-11-2013] காலையிலேயே உற்சாகமான நண்பர்களுடன் இருந்தேன். சரியான தூக்கமில்லை. முந்தையநாள் தங்கவேல் வீட்டில் தூங்க விடியற்காலை இரண்டுமணி ஆகியது. காலை ஆறுமணிக்கே விழித்துக்கொண்டு காலைநடை. பின்பு விடுதிக்குத்திரும்பி அரங்கசாமியும் கிருஷ்ணனும் நானும் பூபதியும் பேசிக்கொண்டிருந்தோம். பின்பு மீண்டும் தங்கவேல் வீடு. யுவன் வந்தான்.சாப்பிட்டுவிட்டு நேராக புக்பாயிண்ட் அரங்கம்

அரங்கம் நான் செல்லும்போதே பாதியாகிவிட்டிருந்தது. என் வாசகர்களும் அலெக்ஸின் நண்பர்களுமாக அரங்கு நிறைந்த கூட்டம். ஐந்தரை மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. அழகரசன் அவர்கள் நூலை வெளியிட்டார்

முதலில் இமையம் பேசினார். தமிழ் ஹிந்து நாளிதழில் அவர் எழுதிய கட்டுரையின் விரிவான வடிவம். பின்பு பேராசிரியை சரஸ்வதி வெள்ளையானையை விரிவான ஆய்வுநோக்கில் மதிப்பிட்டு ஓர் உரையை வாசித்தார்

அதன்பின்புதான் செ.கு. தமிழரசன் வந்தார். அவருக்கு அன்று பிறந்தநாள் என்பதனால் கொஞ்சம் தாமதமாகியது என்றார். அவரது உரை சுருக்கமான வாழ்த்துரையாக இருந்தது. லெமூரியர் தலித்துக்களின் ஒட்டுமொத்தமான வாழ்க்கையை முன்வைத்து மேலும் படைப்புக்கள் வரவேண்டுமென்ற கோணத்தில் பேசினார்

கௌதம் சன்னா சென்னையின் வரலாற்றுப்பின்னணியில் வைத்து வெள்ளையானை நாவலை அணுகினார். அதன் பின்பு நான் ஏற்புரை வழங்கினேன். அலெக்ஸ் நன்றி சொன்னார்

பல நண்பர்களை மீண்டும் சந்திக்கமுடிந்தது. இத்தகைய விழாக்களின் அழகிய அம்சங்களில் ஒன்று இது. இரவில் கெவின்கேர் பாலாவுடன் நண்பர்கள் போட்கிளப்பிற்குச் சென்று சாப்பிட்டோம். பன்னிரண்டு மணிக்கு விடுதிக்கு வந்தேன்

ஓர் இனிய நிறைவான நாள்.

முந்தைய கட்டுரைஉதிர்ந்த ரத்தத்துளிகளின் கதை
அடுத்த கட்டுரைஇரு பொருட்கள்