“அநங்கம்”

வணக்கம் ஜெயமோகன் அண்ணா.

எங்களது மலேசிய இலக்கிய முயற்சிகளை உங்கள் வாசகர்களுக்குக் கொண்டு செல்ல இங்கே ஒரு அறிமுகம் கொடுத்துள்ளேன். அநங்கம் இதழைப் பற்றிய சிறு அறிமுகக் கட்டுரை. உங்கள் வலைத்தலத்தில் பிரசுரம் செய்தால் பரவலான உலகப் பார்வைக்குச் செல்லும். மிக்க நன்றி.

 

“அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்

மலேசிய இலக்கியத்தின் தீவிர களமான அநங்கம் இதழ் தொடர்ந்து தனது 5ஆவது இதழைப் பிரசுரித்துள்ளது. உள்ளூர் படைப்பாளிகளின் படைப்பு களமாகவும் சிங்கப்பூர்/தமிழகம்/அயலக படைப்பாளர்களின் பகிர்வு களமாகவும் அநங்கம் தனது எல்லையை விரித்துக் கொண்டு தனித்த அடையாளங்களோடு கொண்டு வரப்படுகின்றன. இம்மாத அநங்கம் இதழ் புறக்கணிக்கப்பட்ட மறக்கப்பட்ட கலைகளின் சிறப்பிதழாக வந்துள்ளது. மேலும் அடுத்த இதழ் சிறுகதை சிறப்பிதழாக மலரவிருக்கின்றது.

தொடர்பிற்கு: கே.பாலமுருகன் (ஆசிரியர்)

http://bala-balamurugan.blogspot.com/

[email protected]

[email protected]

 

முந்தைய கட்டுரைகொற்றவை கடிதம்
அடுத்த கட்டுரைமலையாளவாதம், கடிதங்கள்