«

»


Print this Post

வெள்ளையானை- கடிதங்கள்


வெள்ளையானை உள்ளிட்ட படைப்புகள் மற்றும் கட்டுரைகளை மேற்கோள் காட்டி ஆங்கில தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் சில நண்பர்களுடன் இந்த விஷயத்தப் பற்றி முன்பே பகிர்ந்துகொண்டேன்… அவர்களிடம் நான் கவனித்தது, முதலில் ஒரு அலட்சியம்… தமிழில் இதைப் பற்றியெல்லாம் எழுதிவிடமுடியுமா என்ன? பின்னர் பிரிட்டிஷ்காரனை குறை சொல்லுவதைப் பற்றி ஒரு எரிச்சல்…

அதுசரி, இளவரசரின் திருமணத்தை லைவ் ரிலே செய்து புளங்காகிதம் அடைந்தவர்களிடமும்.. இளவரசிக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என ஆவலுடன் காத்திருந்தவர்களிடமும் என்ன எதிர் பார்க்க முடியும்? தமிழில் எழுதியதாக சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை புள்ளிவிவரத்துடன் ஆங்கிலத்தில் படிக்க நேரும்போது அவர்கள் முகம் எப்படி மாறும் என ஊகிக்கிறேன்… பாவம் !

http://greatgameindia.wordpress.com/2013/01/13/indian-holocaust-under-british-raj-1-8-billion-excess-deaths-ignored-by-anglo-media/

rgds
பாண்டியன்

அன்புள்ள ஜெமோ

வெள்ளையானை வாசித்தேன். நான் உங்களுடைய நாவல்கள் அனைத்தையும் வாசித்தேன். உங்கள் நாவல்களை நான் மூன்றுவகையாகப் பிரிப்பேன். விஷ்ணுபுரம் , பின் தொடரும் நிழலின்குரல் ஆகிய நாவல்கள் நீங்கள் கிரியேட்டிவிட்டியின் வேகத்தில் அடித்துச்செல்லப்பட்டு எழுதிய நாவல்கள். அவற்றிலே வடிவம் நடை எல்லாவற்றிலும் கொஞ்சம் பிசிறுகள் இருக்கும். சரிவிகிதமாக இருக்காது. ஆனால் மொத்த நாவலிலுமே ஒரு வேகம் நிகழ்ந்திருக்கும்.

கன்யாகுமர், இரவு, ஏழாம் உலகம் போன்ற நாவல்கள் எழுத்துத் திறமை நன்றாக கைவந்துவிட்ட மஸ்டர் எழுதியவை. எல்லாம் போகிறபோக்கில் விசிறப்பட்டிருந்தாலும் ஒவ்வொன்றும் அதனதன் இடத்திலே போய் விழும். ஏழாமுலகம்அவற்றில் எல்லாவகையிலும் நல்லநாவல். மற்றவை ஆங்காங்கே நீங்கள் தெரிவீர்கள் என்பதனால் முக்கியமானவை. இன்னொருவர் அவரது ஒரே நாவலாக அவற்றில் எதை எழுதியிருந்தாலும் கொண்டாடியிருப்பார்கள்.

கொற்றவைதான் இதுவரை வந்ததிலே கிரியேட்டிவிட்டியும் டெக்னிக்கும் மிகச்சரியாக அமைந்த நாவல். பெர்பெக்ட் என்று சொல்லிக்கொண்டே இருந்தது மனசு. எனக்கு கமுகுப்பாளை போன்ற இயற்கையில் உள்ள சிலவிஷயங்களை பிரித்துப்பார்க்கும்போது அப்படி கூவத்தோன்றும். பர்பக்ட் அண்ட் கிரியேட்டிவ்.

அதன்பிறகு இப்போது வெள்ளையானை இதுவரை நீங்கள் இந்த அளவுக்கு ஸ்டைலான ஒரு நாவலை எழுதவில்லை ஜெ. அரசியலில் எல்லாம் எனக்கு பெரிய ஈடுபாடு கிடையாது. அதன் தொடக்கம் முடிவு கதைவிரியக்கூடிய பேட்டர்ன் எல்லாவற்றிலும் உள்ள அந்த டெஃப்டை எப்படி வியந்தாலும் சரிதான். ஷெல்லிகவிதைகள் அமைந்திருக்கும் இடம் .கடைசியில் அந்த நீளமான விருந்தில் நடக்கும் உரையாடல் ஒஉ உச்சம். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருசில வார்த்தைகள் வழியாகவே வந்து நிற்கிறது. ஒவ்வொருவரும் ஒரு அரசியலை அல்லது நிலைபாட்டை கொண்டிருக்கிறார்கள். அந்த பனிக்கட்டியின் ரத்தம் குறியீடு. subtle and perfect – like an organic structure. அதுதான் என் கருத்து. organic structures அளவுக்கு கச்சிதமான இயந்திரங்களே இல்லை. ஏனென்றால் செய்தபிறகு பெர்ஃபாமென்ஸ் இல்லை. பெர்ஃபாமென்ஸ் வழியாகத்தான் அவற்றை செய்திருக்கிறது இயற்கை வாழ்த்துக்கள்

ஜெயராமன்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/41746