தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-2

ஜெ,

தெளிவத்தை ஜோசப்புக்கு விருது என்று கேட்டபின்னர்தான் இணையத்தில் அவரைப்பற்றி வாசித்தேன். அவரது இரண்டுசிறுகதைகள் வாசிக்கக் கிடைத்தன. இரண்டுமே எனக்குப்பிடித்திருந்தன. எளிமையான அலட்டல் இல்லாத கதைகள். ஆனால் எந்தவிதமான முற்போக்குப்பாவனைகளும் இல்லாமல் மலையக மக்களின் வாழ்க்கையை அவை சொல்லிவிட்டன. இவரை இன்னும் வாசிக்கவேண்டுமென நினைக்கிறேன். இத்தகைய படைப்பாளிகளை நாம் இன்னும் இங்கே கவனிக்காமலிருப்பது ஆச்சரியம்தான். அவரை முன்வைத்த உங்களுக்கு நன்றி

சரவணன் எம்

அன்புள்ள ஜெ

தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது அளிப்பதுகுறித்து மகிழ்ச்சி. நான் அவரை 2000 தமிழினி மாநாட்டில் சந்தித்துப்பேசியிருக்கிறேன். அவருக்கு என்னை நினைவில்லாமலிருக்கலாம். தமிழகத்தில் எவராவது இங்கிருந்து இவ்வளவு மக்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்ததைப்பற்றி நாவல் எழுதியிருக்கிறார்களா என்று கேட்டார். புதுமைப்பித்தன் எழுதிய துன்பக்கேணி தவிர வேறு எதுவுமே எழுதப்படவில்லை என்று சொன்னேன். அதைப்பற்றி மிகுந்த வெட்கம் ஏற்பட்டது அப்போது. இப்போதும் அந்த வெட்கம் இருக்கிறது. தெளிவத்தை ஜோசப் அவகளுக்கு வாழ்த்துக்கள்

மகாதேவன் எஸ்

முந்தைய கட்டுரைமங்கள்யான்
அடுத்த கட்டுரைமங்கள்யான்- கடிதங்கள்