கனிதல்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tx9AgSM6muk

சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார், ‘சமவயதானவர்கள் இயற்கைமரணம் அடைய ஆரம்பிக்கும்போது நம் வாழ்க்கையின் இன்னொரு கட்டம் ஆரம்பிக்கிறது’

சமீபத்தில் என் அண்ணன்களில் ஒருவர் இறந்துபோனார். என் அம்மாவின் இரண்டாவது அக்காவின் மூத்தமகன் ரவி. மாரடைப்பு. சர்க்கரை நோயும் இருந்தது. இங்கே சகோதரிகளுக்குப் பிறந்த பிள்ளைகளை ஒரேகுடும்பத்துச் சகோதரர்கள் என்று சொல்வார்கள். ‘நீங்கள் எத்தனைபேர்?’ என்று கேட்டால் ‘நாங்கள் மூன்று அம்மாக்களுக்கு எட்டுபேர்’ என்று சொல்வார்கள்

என் அம்மாவின் மூத்த அக்கா தாட்சாயணிக்கு ஒருமகன் ஒரு மகள். இரண்டாவது அக்கா மீனாட்சிக்கு மூன்று மகன்கள். என் அம்மாவுக்கு இரு மகன்கள் ஒரு மகள். ஆக நாங்கள் மூன்று அன்னையருக்கு எட்டு பிள்ளைகள். இதில் வயதுவரிசையில் மூன்றாமவர் ரவி அண்ணா

அவரது இயற்கைமரணம் என்னை ஆழமான ஓர் ஏக்கத்திற்கும் பின்பு உள்ளார்ந்த ஒரு மௌனத்துக்கும் கொண்டுசென்றது. சுந்தர ராமசாமி சொன்னதுபோல.

தன் பள்ளித்தோழி அங்கையற்கண்ணியின் மரணம் பற்றி அ.முத்துலிங்கம் எழுதியிருக்கும் இக்குறிப்பு எழுத்து முதிரும் புள்ளியில் அடுத்த சொல் நிகழாமலிருக்கக் கற்ற பெரும் கலைஞனின் கைகளைக் காட்டுகிறது

முந்தைய கட்டுரைநீதியுணர்வு ஓர் ஆட்கொல்லி நோய்- வெள்ளையானை
அடுத்த கட்டுரைசென்னையில் ஒரு மாலை