அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்.
எங்கள் துறையில் பயின்று தமிழிலக்கியத்திற்குத் தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கிய முன்னாள் மாணவர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் ஒரு சிறப்புச் சொற்பொழிவினை எங்கள் துறையில் நிகழ்த்த உள்ளோம்.
அவ்வகையில் இந்த ஆண்டு கவிஞரும் திறனாய்வாளரும் இதழாளருமான திரு ராஜமார்த்தாண்டன் அவர்களின் சிறப்பினை விளக்கும் வகையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராஜமார்த்தாண்டன் அவர்களின் தமிழ்ப்பணி, அவருடனான உங்கள் அனுபவம், அவரைப்பற்றிய சிறப்புச் செய்திகள் ஏதேனும் ஒன்றை எங்களுக்கு எழுதி அனுப்பி உதவுங்கள்.
தங்கள் உதவி எங்கள் மாணவர்களுக்குப் பெரிதும் துணைபுரியும்.
நன்றி.
இப்படிக்கு,
முனைவர் க.முத்துஇலக்குமி,
துறைத்தலைவர்,
துறைத்தலைவர்,
தமிழ்த்துறை & ஆய்வுமையம்,
அரசுக்கல்லூரி சித்தூர்,
பாலக்காடு, கேரளம் 678 104
அன்புள்ள முத்துஇலக்குமி
ராஜமார்த்தாண்டனைப்பற்றி நான் விரிவாகவே எழுதியிருக்கிறேன். கீழ்க்கண்ட கட்டுரைகளைப் பார்க்கவும்
கவிதையின் காலடியில் ராஜமார்த்தாண்டனின் கவிதை விமர்சனம்
படங்கள்
ராஜமார்த்தாண்டன் அஞ்சலி
ஜெயமோகன்