‘சீர்மை ஒரு கிளாஸிக்’ – கடிதங்கள்

ஜெ,

புதியவர்களின் கதைகள் என்ற வரிசையில் இந்த தளத்தில் நீங்கள் வெளியிட்ட கதைகளிலேயே கிளாஸிக் என்பது சீர்மைதான். அறிமுக எழுத்தாளர் என்றால் ஒரு பெரும்படைப்பாளியின் அறிமுகம் என்று தயங்காமல் சொல்வேன். தமிழின் எந்த ஒரு பெரும்படைப்பாளிக்கும் நிகரான நடை, கூர்மையான கதைகூறும் முறை. அடுத்தடுத்த பகுதிகளை எதிர்பார்க்கிறேன். யாருடைய கதை என்ன என்று தெரிந்து இன்னும் மன எழுச்சியை உருவாக்குகிறது

சண்முகம்

ஜெயமோகன்,

சீர்மையைப் படித்து வியந்துகொண்டே இருக்கிறேன். திரும்பத்திரும்ப வாசிக்கின்றேன். என்ன ஒரு நேர்த்தியான அற்புத எழுத்து. Symmetry க்கான தேடலானது மனிதனுக்கு எப்போது பிரக்ஞை ஆரம்பித்ததோ அப்போதே தொடங்கிவிட்டது. ஏனென்றால் அது மரணத்திற்க்கும் நோய்க்கும் அழிவுக்கும் எதிரானதொன்று.decay என்பது பரிபூரணம் என்ற ஒன்றிலிருந்து descendance தான். அதைத்தான் மனிதன் வாழ்க்கை முழுக்கவே பார்க்கிறான்.அந்தச் சரிவிலிருந்து The absolute ன் Symmetry யை அவன் உணர்ந்துகொள்கிறான். இத்தனை கலைகளையும் உருவாக்கிய drive அதுதான். சிந்தனையால் அந்த வேகத்தை தொடமுடியாது. அது காற்றை முகவையால் அள்ளிப்பார்ப்பதுபோன்றது என்று நிசர்கதத்த மகராஜ் ஓர் உரையிலே சொல்கிறார். கென் வில்பர் செய்தது அதைத்தான்

கதை எங்கே செல்கிறது என்று நன்றாகத் தெரிகிறது. எப்படி முடிந்தாலும் இது ஒரு பெரிய படைப்பு. வாழ்த்துக்கள்

பரவசத்துடன்

ஸ்ரீனிவாசன்

முந்தைய கட்டுரைகடைசிக்கண் – கடிதம்
அடுத்த கட்டுரைசீர்மை (2) – அரவிந்த்