மு.வ-வும் புதுமைப்பித்தனும்

அன்புள்ள ஜெயமோகன்,

முவவின் எக்ஸ்ரே என்ற பதிவினைப் பார்வையிட்டேன். நீங்கள்தான் தப்பாகச் சொல்லிவிட்டீர்கள். மாலனின் இணையதளத்திலே முழுக்கதையும் அப்படியே இருக்கிறது. அந்தக்கதை மாலன் எழுதிய ’புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே’ தான். அது புதுமைப்பித்தன் எழுதிய கடவுளைச் சந்தித்த கந்தசாமிப்பிள்ளை என்ற கதையின் இரண்டாம்பாகமாக எழுதப்பட்டது. அதைப்பற்றி அந்தகதையிலேயே குறிப்பு உள்ளது. இந்த மாதிரி தவறு கண்டுபிடிக்கும்போது அவசியமான பரிசோதனைகளை நீங்கள்தான் செய்யவேண்டும். தகவல்களை பார்க்கவேண்டும். மனதில்தோன்றுவது போல எழுதக்கூடாது

இரா.பிரபு

அன்புள்ள பிரபு,

மிக்க நன்றி. நான் தவறாகச் சொன்னாலும் தவறாமல் வந்து திருத்திவிடக்கூடிய உங்களைப்போன்ற பல்லாயிரம்பேர் இணையத்தில் உள்ளனர் என்ற நம்பிக்கையில்தானே எழுதுகிறேன்?

ஜெ

முந்தைய கட்டுரை11. சீர்மை (1) – அரவிந்த்
அடுத்த கட்டுரைவிரிவடையும்போது வளர்தல்