நூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் – கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஐயா,

அருள்திரு காட்சன் எழுதிய ‘பரிசுத்தவான்கள்’ ​​நெஞ்​சை ​தொட்டது. நி​னைவிலிருந்தபடி ​தொடர்ந்து உ​ரையாடக்கூடிய க​தை அது. இளம் ​நெஞ்​​சங்களின் ஆ​சைகள், விருப்பங்கள் ​பெரியவர்களால் சந்​தோஷத்​தோடு அனுமதிக்கப்பட்டு, கவனிக்கப்பட்டு மகிழத்தக்கன. ஆனால், தன்​னை பரிசுத்தமாக காட்டுவதற்காக இள​மொட்​டொன்றின் விருப்பத்​தை பறிக்கும் சமுதாயத்​தை படம் பிடித்துக் காட்டுகிறது க​தை.

தன்​னை மற்றவர்க​ளைக் காட்டிலும் ஏதாவது ஒரு விதத்தில் உயர்வாக காட்டிக் ​கொள்ள, எண்ணிக் ​கொள்ள​வே மனிதன் விரும்புகிறான். உலகியல் விஷயங்க​ளைப் ​போல​வே ஆன்மீக விஷயங்களும் தற்​பெரு​மைக்கான, இறுமாப்புக்கான அளவு​கோல்களாக மாறிப் ​போகின்றன. மற்றவர்க​ளை விட ஆண்டவ​ரோடு தனக்கு ​நெருக்கம் அதிகம் என்று நம்புவதற்கு, காட்டிக் ​கொள்வதற்கு அதன்மூலம் திருப்திய​டைவதற்கு ஒரு கூட்டத்தினர் விரும்புகினறனர்.

லூக்கா

18 அதிகாரம்

9. அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் (இ​யேசு) ஒரு உவமையைச் சொன்னார்.

10. இரண்டு மனுஷர் ஜெபம் பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன் ​(யூத மத த​லைவர்களுள் ஒரு பிரிவினன்) மற்றவன் ஆயக்காரன் (வரி வசூலிப்பவன் – மத சமுதாயத்தினரால் பாவியாக எண்ணப்பட்டவன்).

11. பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

13. ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

காலமாற்றத்தினால் ச​பை பிரிவுகளின் எண்ணிக்​கையும் அதிகமாகிறது. ஆண்டவரின் விருப்பத்திற்கு மாறாக, ​நெரிந்த நாணல்கள் முறிக்கப்படுகின்றன. மங்கி​யெரிகிற திரிகள் அ​ணைக்கப்படுகின்றன.

அன்புடன்,
ஆசீர்

அன்புள்ள ஜெ,

லூசிஃபர் வயலட் எழுதிய கதை புதியது இல்லை என்றாலும் நன்றாக இருந்தது. எழுதியவருக்கு வயது 22 என்னும்போது அது ஒரு பெரிய முயற்சி. இந்தவயதிலே காதல், கொள்கைகள் என்றெல்லாம்தான் யோசிப்பார்கள். நாம் காணும் உலகத்துக்கும் நமக்குள் இருக்கும் உள்ள உலகத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்ற கோணத்திலே ஒருவர் யோசித்திருப்பது ஆச்சரியத்தை அளித்தது.

கதையிலேயே சொல்லியிருப்பதுபோல ரொம்பவும் காஃப்காத்தனமான கதை. கதையின் சிறப்பும் அதுதான். பலவீனமும் அதுதான்.

ஜெயராமன்

அன்புள்ள ஜெ,

அழைத்தவன் வலிமையான கதை. முதிய தம்பதிகள் மூளைவளர்ச்சி இல்லாத மகனை கொஞ்சநாள் கடாசிவிட்டு நிம்மதியாக இருந்தாலென்ன என்று நினைக்கிறார்கள் என்பது மிக ஆச்சரியமானது. ஆனால் அதுதான் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. அவர்களுக்கு குற்றவுணர்ச்சியும் இல்லை. ஏனென்றால் வாழ்க்கை என்பது அனுபவிப்பதற்காகத்தான் என்ற சுயநலம் அவர்களுக்கு இருக்கிறது. அந்தக்கதையின் கடைசிவரியில் இருந்து அதற்குப்பின்னராக அவர்களுக்கு குற்றவுணர்ச்சி தொடங்கும் என நினைக்கிறேன்.

அதேபோல நீர்க்கோடுகள். அதிலும் இதே பிரச்சினைதான். அதில் பிளெசியின் மரணத்துக்குப்பின்னர் அனுபவித்தாலென்ன என்ற எண்ணம் வருகிறது. மனம் அலைபாய்கிறது.

ஆச்சரியமாக உள்ளது. இந்தக்கதைகள் எல்லாமே பலகோணங்களிலே முன்பு பலரும் எழுதிவிட்டவைதான். ஆனால் மீண்டும் இதிலே புதியதாகச் சொல்ல பல விஷயங்கள் உள்ளன. இதுவரை எவரும் ஹென்றியின் பிரச்சினைபோன்ற ஒன்றை எழுதியதில்லை. இதெல்லாம் இந்தக் காலகட்டத்துக்குரிய பிரச்சினைகள் என நினைக்கிறேன்.

அருள்

முந்தைய கட்டுரை9. நூலகத்தில் – லூசிஃபர் ஜே வயலட்
அடுத்த கட்டுரைவிஜய் சூரியன்