காட்சன்

Rev. Godson

அருள்பணி. காட்சன் சாமுவேல்

அருள் பணியில் நான்காம் தலைமுறையாக நான் பணியாற்றுவது கடவுள் அருளே.தற்செயலகவே பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பினைபெற்றேன். எனது பனை மரம் மீதான காதலை அவர்களே கூர்தீட்ட உதவினார்கள்.அதற்குப் பரிசாக, ஒரு பனைத்தொழிலாளி வேடமிட்டு எனது இறையியல் கல்லுரியின்உச்சபட்ச தேர்வாகிய “மாதிரி அருளுரையை” குருத்தோலை ஞாயிறு என்றதலைப்பில் வழங்கினேன்.

மார்த்தாண்டம் பனைத்தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் சார்பில் சுனமியால்பதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வும் மறு கட்டமைப்புகளும் செய்யும்பணியில் ஈடுபட்டிருந்தேன். பிற்பாடு மும்பையில் உள்ள லுத்தரன்திருச்சபையோடு இணைந்து தெருவோரக் குழந்தைகளுக்காகவும், பாலியல் ொழிலில்ஈடுபட்டிருப்போருக்காகவும் செயல்படும் தொண்டு நிறுவனத்தில் உதவிசெய்துகொண்டிருந்தேன். மெதடிஸ்ட் திருச்சபையின் அழைப்பு பெற்றபோது நான்எவ்வித எதிர்பார்ப்புடனும் செல்லவில்லை. அப்படியே என்னை மெதடிஸ்ட்திருச்சபை ஏற்றுக்கொண்டது எனக்கான ஒரு இடத்தை கடவுள் இங்கேஆயத்தப்படுத்தியிருந்ததால் மட்டுமே.

மும்பைக்குச் சற்று வெளியே மீரா ரோடு எனும் பகுதியில் போதகராக நான்குவருடங்களும், புனே – லோனவாலா செல்லும் பாதையில் உள்ள டெகு ரோடு எனும்மெதடிஸ்ட் திருச்சபையில் சுமார் 10 மாதங்களும் பணியாற்றினேன். தற்பொழுதுஅகமதாபாத்தில் உள்ள மெதடிஸ்ட் தமிழ் திருச்சபையில் பணியாற்றி வருகிறேன்.

உள்ளத்தின் அடியாழத்தில் இந்திய கிறிஸ்தவ குழந்தைகளுக்கான பத்திரிகைஒன்றை திருச்சபையோடு இணைந்து ஆரம்பிக்க வேண்டி ஒரு உந்துதல்இருந்துகொண்டே இருக்கிறது.

பனை ஓலைகளைக்கொண்டு ஓவியங்கள் செய்து காட்சிக்கு வைப்பது எனக்கே எனக்காககடவுள் அருளிய வரம். இவ்வரத்தை எவரும் இலவசமாக இறையருளால்பெற்றுக்கொள்ளலாம்.

மனைவி ஜாஸ்மின் சொல்லுகின்ற கதைகளை விரும்பி கேட்பேன். நான்கு வயது மகன்ஆரோன் எனது விளையாட்டுத் தோழன். குட்டி தம்பி ‘மித்ரன்” அக்டோபர் 17 தனதுமுதல் பிறந்தநாளை கொண்டாடுகிறார். 50 வருட பழமையான ஒரு மிலிட்டரி ராயல்என்ஃபீல்ட் தான் கடந்த 5 வருடங்களாக எங்கள் குடும்ப வாகனம்.

ஜெயமோகன் அண்ணன் வாழுகின்ற பார்வதிபுரத்தின் இடப்புறத்தில் உள்ள பெருவிளைஎனும் சிறு கிராமம் அப்பாவின் ஊர். அப்பா போதகராக சி எஸ் ஐ திருச்சபையில்49 வருடங்கள் பணியாற்றியவர்கள். அம்மா சுவாலஜி டீச்சர் என முத்திரைபதித்தவர்கள். மூன்று அக்காவும் மூன்று அண்ணன்களும் நேசிக்கும்
கடைக்குட்டித் தம்பியாகவே இன்றும் இருக்கிறேன்.

முந்தைய கட்டுரை3. கடலாழம் – கிறிஸ்டோபர்
அடுத்த கட்டுரைஅப்பாவின் குரல்-கடிதங்கள்