ஒழிமுறி – இன்னொரு விருது

டி.ஏ.ஷாஹித் நினைவு திரைக்கதை விருதை ஒழிமுறிக்காக பெற்றுக்கொண்டு நேற்றுதான் ஊர் திரும்பினேன். இன்று இன்னொரு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. Inspire Film Awards 2013 அறிவிக்கப்பட்டுள்ளது. ஒழிமுறி சிறந்தபடம் சிறந்த நடிப்பு [லால்] சிறந்த திரைக்கதை [நான்] ஆகிய மூன்று விருதுகளை பெற்றிருக்கிறது.

Aimfill Inspire Film Awards கேரளத்தில் திரைப்படங்கள் மற்றும் கட்டிட வரைவாளர்களுக்காக வழங்கப்படும் முக்கியமான விருதாகக் கருதப்படுகிறது. கொச்சியை மையமாகச் செயல்படும் வெவ்வேறு நவீனத் தொழில்முறைக் கலைஞர்களின் கூட்டமைப்பு இது.

இது ஒழிமுறி திரைக்கதைக்காக நான் பெறும் மூன்றாவது பரிசு.

சென்றவருட விழா நிகழ்வுகள்

மோகன்லால்

முந்தைய கட்டுரை1. பூ – போகன்
அடுத்த கட்டுரைஜெயன் கோபாலகிருஷ்ணன்