வணிக எழுத்து x இலக்கியம்

இந்து தமிழ் நாளிதழில் ‘நமக்குத் தேவை டான் பிரவுகள்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையை ஒட்டி நிறைய கடிதங்கள் வந்தன. கணிசமானவை நான் எழுதியதை புரிந்துகொள்ளாமல் எழுதப்பட்டவை. புரிந்துகொள்ளும் முயற்சி அற்றவை, திராணி அற்றவை. அவற்றை நான் பொருட்படுத்த விரும்பவில்லை.

ஆனால் புதியவாசகர்கள் சிலர் வணிகக்கேளிக்கை எழுத்து – இலக்கியம் என்ற பிரிவினையை முதலில் கேள்விப்படுபவர்கள் என்று தெரிந்தது. அதை புரிந்துகொள்வதில் அவர்களுக்கு இடர்ப்பாடு இருப்பதை கவனித்தேன். மீண்டும் மீண்டும் ‘எது வணிக எழுத்து என எப்படி தீர்மானிப்பது?’ என்பது போன்ற சம்பிரதாயமான கேள்விகள். ‘இலக்கியம் என்பதை வாசகன் தீர்மானிக்கட்டும்’ போன்ற அப்பாவித்தனமான கருத்துகள் எனக்கு எழுதப்பட்டன.

இவர்களில் சிலரேனும் மேலும் வாசிக்க, மேலும் புரிந்துகொள்ள முயல்வார்கள் என்பதனால் பழைய விவாதங்களை மீண்டும் இங்கே சுட்டிகொடுத்து அளித்திருக்கிறேன்.

நான் எழுதிய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூலில் விரிவாகவே இதைப்பற்றிய விளக்கம் உள்ளது.

இருவகை எழுத்து

பாலகுமாரனும் வணிக இலக்கியமும்

விற்பனையும் இலக்கியமும்

எல்லாமே இலக்கியம்தானே சார்?

வணிக எழுத்து தேவையா?


இலக்கியமும் அல்லாததும்


கேளிக்கை எழுத்தாளர்- சீரிய எழுத்தாளர்

முந்தைய கட்டுரைவணிக எழுத்து – இலக்கியம் – முரண்பாடு
அடுத்த கட்டுரைதனுஜா ரங்கநாத் -ஒரு மோசடி