வணிக எழுத்து – இலக்கியம் – முரண்பாடு

அன்புள்ள ஜெ அவர்களுக்கு..

நலமா…

ஹிந்துவில் உங்கள் கட்டுரை படித்தேன். பிரமாதம்..

ஆனால் சில ஆண்டுகள் முன்பு இதற்கு நேர் எதிரான கருத்தை உங்கள் வலைத்தளத்தில் எழுதி இருந்தீர்கள்..

இரண்டுமே சரியாகத்தான் இருக்கும் என நான் கருதினாலும், ஏன் இந்த முரண்பாடு என மக்கள் கேட்கக்கூடும்… எனவே விளக்கம் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டு கருத்தையும் உங்கள் மேலான பார்வைக்கு சுருக்கமாக கீழே கொடுத்துள்ளேன்.. விரிவாக என் வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன்.

பேரன்புடன்.
பிச்சைக்காரன்
http://www.pichaikaaran.com/2013/10/blog-post_8.html

அன்புள்ள பிச்சைக்காரன்,

ஒருபோதும் கருத்துக்களை ஒற்றைப்படையாக முன்வைக்கலாகாது என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆகவே எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட தரப்புகளை கருத்தில்கொண்டு, சமன்செய்து மட்டுமே என் கருத்தை முன்வைக்கிறேன். என் கருத்து பற்றிய ஐயமோ குழப்பமோ உருவாகும்போது நான் சொல்லவருவதை முழுமையாக வாசிக்க முயற்சி எடுத்துக்கொள்ளக்கூடிய, அவற்றைப் புரிந்துகொள்ளக்கூடியவர்களுக்காகவே நான் பேசிவருகிறேன்.

நீங்கள் கேட்ட இந்தவினா கிட்டத்தட்ட ஒருவருடம் முன்னரே இதேபோல ரத்தன் அவர்களால் கேட்கப்பட்டு விரிவான பதிலும் சொல்லப்பட்டுவிட்டது. அதை ஒருமுறை உங்களுக்கும் நான் அனுப்பியிருக்கிறேன் என நினைவு.

என்வரையில் இதில் எந்த முரண்பாடும் இல்லை.

மீண்டும் அக்கட்டுரையின் சுட்டி http://www.jeyamohan.in/?p=30942

நன்றி

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைமுதல் எதிர்க்குரல்
அடுத்த கட்டுரைவணிக எழுத்து x இலக்கியம்