புகைப்படங்கள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ

உங்கள் புகைப்படங்களைப் பார்த்தேன். முக சோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்காது. முகலட்சணம் வைத்து இதை சொல்லலாம். நீங்கள் கண்களைச் சுருக்கிக் கோன்டு பார்க்கிறீர்கள். எல்லாவற்றையும் கொஞ்சம் சந்தேகத்துடன் ஆராய்ச்சி நோக்கில் பார்க்கக்கூடியவர் நீங்கள். உங்கள் சிரிப்பு பொய்யாக இல்லாமல் உற்சாகமாக இருக்கிரது. ஆகவே நீங்கள் உற்சாகமான மனிதர். இன்னும் மனதளவில் இளமையுடன் இருக்கிறீர்கள். நீங்கள் பொருட்களை கொஞ்சம் தலை சரித்து பார்க்கிறீர்கள். அதாவது நீங்கள் மனதுக்குள் இன்னும் ஒரு சிறுபையனின் மனநிலையை வைத்துக்கோன்டிருக்கிறீர்கள்

அதேசமயம் எப்போதும் தலையை கொஞ்சம் தூக்கி காமிராவை பார்க்கிறீர்கள். பான்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக்கொன்டிருக்கிறீர்கள். கைகளை கட்டிக்கொன்டிருக்கிறீர்கள். இதெல்லாம் நீங்கள் பிடிவாதக்காரர் என்பதை காட்டுகிறது. முரட்டுப்பிடிவாதம் வம்புச்சண்டை ஆகியவற்றை கொன்டவர் என்றும் சொல்லலாம். மேலும் நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர். தற்பெருமைகூட உண்டு. கொஞ்சம் திமிர் என்றும் சொல்லலாம். ஏன் என்றால் எல்லா புகைப்படங்களிலும் நீங்கள் மிகவும் தன்னிச்சையாக நிற்பதுபோல நிற்கிறீர்கள்.  [மன்னிக்கவும்]

உங்கல் மூக்கு சரியான கேரள மூக்கு. பரந்தது. நீங்கள் முன்கோபமும் சினேகபாவமும் கலந்தவர்.எளிதில் மனிதர்கலை தப்பாக புரிந்துகொள்ளக்கூடியவர். அதனால் உங்கலிடம் ஜாக்ரதையாகவே பழக வேண்டும்
என்ன சரிதானே?

நாகராஜன்
நெல்லை

அன்புள்ள நாகராஜன்

இதையெல்லாம் என்னிடம் கேட்டாலே சொல்லியிருக்க மாட்டேனா எதற்கு போட்டோவையெல்லாம் கூர்ந்து பார்த்து கஷ்டப்படுகிறீர்கள்?

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் அனுபவப்பகிர்வையும் புகைப்படங்களையும் கூர்ந்து கவனிக்கிறேன். புகைப்படங்களைப் பார்க்கையில்  உங்களுக்குள் ஒரு குணச்சித்திர நடிகன் இருப்பதாகவே தோன்றுகிறது.

அடித்துச்சொல்கிறேன், சற்றே தொப்பையைக் குறைத்தால் சினிமா வில்லனுக்கான எல்லா அமைப்புகளும் இப்படத்தில் தெரிகிறது: http://i27.tinypic.com/2j13mlf.jpg ஹாலிவுட் வில்லனுக்கான பார்வையை இதில் காண்கிறேன்.

கிண்டல் செய்வதாகவோ உசுப்பேற்றுவதாகவோ எண்ண வேண்டாம், தோன்றுவதைத்தான் சொல்கிறேன் :)

இப்படிக்கு,
ஜெகதீசன்.

பி.கு.: நீங்கள் மீசையைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்ததை அறிவேன், இருந்தாலும் மீசை இல்லாமல் கம்பீரம் சற்று குறைந்தது போலவே தோன்றுகிறது! மென்மையான எழுத்தாளராய் தோன்றுகிறீர்கள்

 

 

அன்புள்ள ஜெகதீசன்,

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு சூத்திரம் உண்டு என்பார்கள்–
எனக்குத்தெரியவில்லை. எனக்கு அதிகம் யாரையும் தெரியாது. அது இதுதான்,
வில்லன் நிஜவாழ்வில் கதாநாயகன். கதாநாயகன் நிஜவாழ்வில் காமெடியன்.
காமெடியன் நிஜவாழ்வில் வில்லன்
நான் ‘ரொம்ப நல்லவன்ன்னு..’ சொல்கிறீர்கள். நன்றி

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

நான் தவறான கண்ணோட்டத்தில் சொல்லவில்லை! தோன்றியதும் படாரென்று சொல்லிவிட்டேன்.

தவிர, நீங்கள் குரூர வில்லன் எல்லாம் அல்ல. அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசன் தீவிரவாதி என்பவன் நல்ல உயரமாக, அழகாக இருக்கக்கூடும் என்று சொல்வதைப் போல நானும் சொன்னேன் :)

நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஜெகதீசன்.

முந்தைய கட்டுரைலோகி கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாகார்ஜுனன் கூட்டம்