சம்ஸ்கிருதம் கடிதங்கள்

சம்ஸ்கிருதம் செத்த மொழி

. இது ஓர் அபத்தமான கூற்று. இன்றைய சம்ஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழி அல்ல. உரையாடலுக்கான மொழியே அல்ல அது. – இது கட்டுரையில் (செப்டம்பர் 4ம்தேதி) காணப்பட்ட வரிகள்.

இதைப்பற்றி:

சம்ஸ்கிருதம் செத்த மொழி – இப்படிச்சொன்னது, திராவிடயியலாளர்களா இல்லையா என்பது உங்கள் பிரச்னை.

இப்படிச்சொல்பவர்கள் மொழியியலாளர்கள் (Linguists) என்பதுதான் நான் சொல்வது.

செத்தமொழி (dead language) என்றால் என்ன? அழிந்த அல்லது காணாமல் போன மொழி (extinct language) என்றால் என்ன? என்று தனித்தனியாக வரையறை சொல்கிறார்கள்.  செத்தமொழி என்றால் என்ன என்று விளக்கும்போது, அவர்கள் இலத்தீனோடு, சமசுகிருதத்தையும் எடுத்துக்காட்டாகக் காண்பிக்கின்றனர்.
அழிந்தமொழிக்கு, நிறைய பழங்காலத்து மொழிகளைக் காண்பிக்கின்றனர். (எ-டு ஆங்கிலோ நார்மன்)

செத்தமொழி இன்றும் எந்த வகையிலாவது இருக்கும். ஆனால், அழிந்த மொழி இருக்காது.

பேச்சுமொழியாக இருந்தால்தான் செத்தமொழியா இல்லையா எனச்சொல்வோம் என்றும், உரையாடலுக்குகந்த மொழியாக இல்லாமல், எழுதுவதற்குமட்டும் இருந்தால்தான், செத்தமொழியா இல்லையா என்று சொல்வோம் என்றும் மொழியிய்லாளர்கள் தங்களுக்குள் சட்டம் போடவில்லை.  எனவே, சமசுகிருதம் செத்தமொழியா இல்லையா எனத் தாராளமாக ஆராயலாம்.

இவர்களெல்லாரும், திராவிடயிய்லாளரோ, தமிழ்ப்பார்ப்பனருக்கு எதிரிகளோ இல்லை. இவர்கள் கல்வியியலாளர்கள். இவர்களின் defintions உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.  மாறுபட்ட கருத்து இருப்பினும் அவற்றை வேண்டாமென கல்வியாளர்கள் ஒதுக்குவதில்லை.  இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படிக்கு
கரிக்குளம்.

 

அன்புள்ள கரிக்குளம்

உங்கள் நியாயங்கள் என்னால் புரிந்துகொள்ளக்கூடியவையாக இல்லை.
சம்ஸ்கிருதம் பற்பல நூற்றாண்டுகளாக எவராலும் பேசபப்டவில்லை. எப்போதும்
அது அறிவுத்துறைக்குள்ள இணைப்புமொழியாகவே இருந்து வந்துள்ளது. அதன் பெயரே
அதைத்தான் சுட்டுகிறது. அதாவது அது சம்ஸ்கிருதமாக உருவானபோது எப்படி
இருந்ததோ அப்படித்தான் இப்போதும் உள்ளது. இதில் சாவு எங்கே வந்தது?

 

திருவாளர் செயமோகன் அவர்களுக்கு,

தமிழ்நாட்டிலும் வெளியிலுமாக பதினைந்துகோடி மக்கள் தமிழ் பேசுகிறார்கள். ஆகவேதான் தமிழ் வாழ்கிறது, சில ஆயிரம் பார்ப்பனர்கள் கோயிலுக்குள் பொருள்புரியாமல் விடும் குசு தான் சமசுகிருதம். ஆகவேதான் அதை செத்த மொழி என்று சொல்கிறோம். நீங்கள் என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும் சமசுகிருதம் செத்த மொழியேதான். அதை எந்த சங்கரன் வந்தாலும் எழுப்ப முடியாது. ‘ஆரியம் போல் அழியாமல் நின்ற’ மொழி என்று மனோன்மணியனார் இதைத்தான் சொல்கிறார். செத்தபாம்பு சமசுகிருதத்தை தூக்கிவைத்துப்பேசுபவர்கள் தமிழினவிரோதிகள் என்பதே உண்மை

செல்வ குணசேகரன்

அன்புள்ள செல்வ குணசேகரன்,

சரி, செத்ததென்றால் செத்ததாகவே இருக்கட்டுமே இப்போது என்ன கெட்டுப்போயிற்று? உங்களுக்கு பிணம் போதுமென்றால் அதை வைத்துக்கொள்ளுங்கள். உயிர் இருப்பது வேறு எவருக்காவது தெரிந்தால் அவர்கள் வைத்துக்கொள்கிறார்கள். நீங்கள் செத்தமொழி என்று சொன்னால் சம்ஸ்கிருதத்துக்கு என்ன குறைந்துவிடுகிறது? ஜாலியாக இருங்கள் ஜெல்வா…

ஜெ

 

சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?

இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்

 

இதுதான் நான் சொல்வது. 

இதற்குப் பதிலாக ‘அறிஞர்கள்’ சொல்கிறார்கள் என்கிறீர்கள். இந்த அறிஞர்கள் எதற்கெல்லாம் கட்டுபப்ட்டவர்கள் என்னென்ன நோக்கங்கள் கொண்டவர்கள் என்று நான் அறிவேன். உங்கள் ‘அறிஞர்’ கோஷத்துக்கு ஒரே பதிலைத்தான் நான் சொல்ல வேண்டும், அன்புள்ள கரிக்குளம் நீங்கள் ஓர் அறிஞரிடம்தான் பேசிக்கொன்டிருக்கிறீர்கள்

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியும் தொழில்நுட்பமும்
அடுத்த கட்டுரைவிக்கிபீடியா,தமிழ்டிக்ட்