போகன்

pookan

போகன் – தன்னைப்பற்றி

பெயர் கோமதி சங்கர். நான் மொத்தமும் நான்கே நான்கு சிறுகதைகள்தான் எழுதி இருக்கிறேன். இரண்டு சிற்றிதழ்களிலும் ஒன்று இணையத்திலும் வந்தது. ஒன்று வம்சி சிறுகதைத் தொகுப்பு ஒன்றில் வெளிவந்தது. நாவல்கள்தான் இலக்கு (என ஒன்றிருந்தால்). இரண்டு நாவல்கள் பாதியில் நிற்கின்றன. என்னுடைய தளமான www.ezhuththupizhai.blogspot.com-இல் இவை இருக்கின்றன. இப்போது கொஞ்சம் கவிதைகள் எழுதுகிறேன். இந்த வருடம் ஒரு தொகுப்பு வரக்கூடும்.

குழித்துறையில் இருக்கிறேன். மருத்துவத்துறையில் பணி. நெல்லை அம்மா ஊர். அப்பாவுக்கு அஞ்சுகிராமம் பக்கம். கருங்குளம் என்றொரு ஊர்.

முந்தைய கட்டுரைதனுஜா ரங்கநாத் -ஒரு மோசடி
அடுத்த கட்டுரை1. பூ – போகன்