என்னைக்குறித்து
கிறிஸ்டோபர் ஆன்றணி, கணிதத்தில் முதுகலை. பிறந்ததும் வளர்ந்ததும் வள்ளவிளை என்னும் கேரளாவை ஒட்டிய அரபிக்கடல் சார்ந்த தமிழக கடற்கரை கிராமம். கடந்த 16 வருடங்களாக கணினி மென்பொருள் துறையில் வேலை. திருமணமாகி நான்கு குழந்தைகள். பெரியவன் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றான். இலக்கிய வாசிப்பில் நுழைந்தது ஜெமோ வழியாக. அது போல் எழுத பழகிக்கொண்டிருப்பதும் நமது குழுமத்தில் மட்டுமே.