துரோணா

vishaal raajaaஇயற்பெயர் : பொன் விஷால் ராஜா.

சொந்த ஊர் : திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட பெற்றோர் நான் பிறப்பதற்கு முன்பே ஆவடிக்கு அருகில் இருக்கும் திருநின்றவூருக்கு குடி பெயர்ந்து வந்துவிட்டார்கள். பிறந்தது வளர்ந்தது வசிப்பது எல்லாமே திருநின்றவூரில்தான்.

தற்சமயம் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன்.

எங்கள் ஊரின் மிகச் சிறிய கிளை நூலகத்தின் தூசி அப்பிய அடுக்குகளில் இருந்து கிடைத்த புத்தகங்கள் வாசிப்பின் மீதும் எழுத்தின் மீதும் பெரும் விருப்பத்தை உருவாக்கியதன் விளைவாக இன்றைக்கு எழுத்தாளன் ஆக வேண்டும் என்கிற கனவு என்னை அதிகமாகவே பிடித்து கொண்டு ஆட்டுகிறது.

துரோணா என்கிற புனைபெயரில் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறேன். என்னுடைய படைப்புகள் உயிரோசை, சொல்வனம், மலைகள், உயிரெழுத்து ஆகிய இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.

முந்தைய கட்டுரை4. பரிசுத்தவான்கள் – காட்சன்
அடுத்த கட்டுரைபுதியவர்களின் இருகதைகள் – கடிதம்