தேசியம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமா.  கோகுலுக்கு நீங்கள் அளித்த பதிலை படித்தேன். வட இந்தியர்களின் கலாச்சார ஆணவம் குறித்து
எழுதி இருந்தார். அந்த இட்லி சாம்பார் மேற்கோள் குறித்து ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
வட இந்தியர்கள் எப்படி இட்லி, தோசை, சாம்பார் வகைகளை ஸ்பூன் போட்டு உறிஞ்சி சாப்பிடுவார்கள்
என்பதை என் கண்ணால் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு தென்னிந்திய உணவுவகைகள் என்றால்
மிக பிரியம். நான் வட இந்தியர்களுடன் சேர்ந்து வேலை செய்திருக்கிறேன். அவர்கள் இந்தியில்
பேசவில்லை என்றால் சிறிது அதிருப்தி  அடைவர்களே   தவிர பெரியாத அலட்டிகொள்ளமாடர்கள்.
அவர்கள் இந்தியாவின் மைய பொது மொழியாக இந்தியை பார்கிறார்கள்.   நாம் அவர்கள்
சொல்லும் கருத்திற் உடனே உடன்பட நம்  மனம் தயங்கும், காரணம் நம் திராவிட கட்சிகள்
நம்மிடையே பரப்பிய இந்தி வெறுப்பு. தமிழர்கள் தவிர அணைத்து தென்னிந்தியர்களும் இந்தியின்
தேவை அறிந்து பள்ளிகளிலேயே கற்றுக்கொண்டு வருகிறார்கள். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு
திராவிட கட்சிகளின் அரசியல் நிலைபாடு வேறு. இப்போது அவர்கள் சென்று சேர்ந்திருக்கும்
இடம் வேறு.  இன்றைய நிலையில் இந்தியை எதிர்க்க சொன்னால் திராவிட கட்சிகளால்
முடியாது என்பதே உண்மை. மேலும் தமிழர்கள் பற்றிய மற்ற இந்தியர்களின் கருத்து
என்னவென்றால், ஒருவர் இந்தி தெரியாது என்றால் அவர் தமிழனாகத்தான் இருக்கவேண்டும்
என்பதுதான். நான் தற்போது இருக்கும் U.A.E இல் விமான நிலையங்களில் இருக்கும் அரபிகள்
கூட இந்திய பயணிகள் வரும்போது இந்தியில் பேசவே விழைகிறார்கள் (அடிப்படை இந்தி).
இங்கு  இருக்கும் பாகிஸ்தானிகள் நமக்கு இந்தி தெரிவில்லை என்றால் நம்மை
மேலும், கீழும் பார்பார்கள். நைஜீரியா வில் நான் வேலை செய்த பொது  சில நைஜீரியா மக்கள்
இந்திதான் உங்கள் பொது மொழியா என்று கேட்டிருகிறார்கள்.
நம்முடைய சுயநல அரசியல் கட்சிகள்தான்  வேற்றுமைகளை ஊதி பேனை பெருமாள் ஆக்குகிறார்கள்.
எளிய மக்கள் அதனை கடந்து போய்விடுகிறார்கள்.  அறிவு ஜீவிகள் தங்களுடைய சுலபதிர்கவோ அல்லது
இந்த உலகம் அவர்களால் உய்ய வேண்டும்  என்றோ பிரிவினை வெறுப்புகளையும் கக்கிகொண்டே இருகிறார்கள்.
மேலும் ஒரு விஷயம்-  துபையிலும்,  மற்ற  uae  இன் நகரங்களிலும் ஷேர்ரிங் (sharing)  என்று பெட் ஸ்பைஸ்(bed space)
என்ற பதங்களை அடிகடி கேட்கலாம்.  தங்களால் ஒரு முழு பிளாட் எடுக்கமுடியதவர்கள் இரு அறைகளோ
மூன்றைகளோ உள்ள வீட்டின் ஒரு அறையை தங்கள் வசிப்பிடமாக ஆகிகொள்வது(sharing).
மற்றது தனிகட்டைகள் (bachelors)   ஒரே அறையில் பல அடுக்கு படுக்கைகள் போட்டு அதில் வசிப்பது.
இந்த இரு இடங்களிலுமே சமையல் அறை, கழிவறை பொதுவானதுதான். இந்த இடங்களில் மதமோ,
மொழியோ ஏன் நாடோ பொதுவாக தடையாக இருப்பதில்லை. ஏனென்றால் தேவைதான் செயல்முறைகளையும்
அதற்கான மன அமைப்பையும் தீர்மானிக்கிறது. மிக எளிமையாக சொல்லவேண்டுமென்றால் மைய தேசியவாதம் என்பது
SHARING, BED SPACE   போன்றது. இதில் வேற்றுமைகள் பல இருந்தாலும், நம் ஒரு பொது கருத்திற்காக ஒன்றாக
இருப்போம் என்பதுதான். அடித்துக்கொண்டு சாவதற்கு பல காரணங்களை கண்டுபிடிப்பதைவிட, சேர்ந்து வாழ்வதற்கு
சில காரணங்களை கண்டுகொள்ளலாம் அல்லவா. நமக்கு பின்னால் வருபவர்களுக்கு நாம் நம்மிடையே விதைக்கப்பட்ட
வெறுப்பு விஷங்களை கொடுக்கபோகிரோமா?. ஒரு தந்தையின்    மனநிலையில் சொல்வதென்றால் நம் மக்கள் நம்மை
விட சிறப்பாக வாழ வேண்டும். அதற்கு சென்ற நூற்றாண்டுகளின் வெறுப்புகளை நம் சந்ததிகளுக்கும் திணிக்காமல்
இருபதே மிக நல்லது.

Thanks & Best Regards

Gurumoorthy Palanivel

அன்புள்ள குருமூர்த்தி,

வட இந்தியர்களின் ஆணவம் என்பதைப்போன்ற பொதுமைப்படுத்தல்களையே நான் எப்போதும் ஐயப்படுகிறேன். வட இந்தியர்கள் என்பது வற்க பேதமில்லாத ஒற்றைச் சமூகம் அல்லதானே?

இன்று, பிகாரில் இருந்து கூட்டம் கூட்டமாக கூலிவேலைதேடி மக்கள் தமிழகம் வந்துகொன்டிருக்கிறார்கள். அவர்களிடம் நாம் ஆணவம் இல்லாமல்தான் நடதுகொள்கிறோமா என்ன?

மானுடபுத்தி எப்போதும் ஒன்றுதான், தருணம் அமையும் இடமெல்லாம் அது தருக்கித்தான் நிமிரும். அதை தாண்டி சிந்தனைசெய்யக்கூடியவர்களையே அறிவுஜீவிகள் எனல் வேண்டும்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் ‘தேசிய சுய நிர்ணயம்’ கட்டுரை படித்தேன். மிக அருமையான கட்டுரை. முன்பு நீங்கள் எழுதிய ‘எனது இந்தியா’ கட்டுரையோடு சேர்த்து வாசிக்கும் போது மேலும் சிறப்பாக இருந்தது. european union என்று ஐரோபிய நாடுகள் அரசியல்/பொருளாதார எல்லைகளை விட்டுக்கொண்டு இருக்கின்றன. south american union போன்றவையும் உள்ளன. ஏன் நாட்டுக்கு இரண்டு, மூன்று இனக்குழுக்கள் சண்டை போட்டுக்கொள்ளும் ஆப்பிரிக்காவில் கூட african union என்ற முயற்சி இருக்கிறது. இப்படி எல்லா நாடுகளும் ஒருங்கிணைந்த கண்டங்களாக இருப்பதன் பலனை புரிந்துகொண்டு இருக்கும் காலத்தில் நம் நாட்டில் சிலர் ஒவ்வொரு மொழிக்கும்/இனத்துக்கும் தனி நாடு கேட்டுக்கொண்டு இருப்பது நம் மக்களின் வாழ்க்கையை பின்னிழுக்கும் முயற்சியே. ஐரோபிய நாடுகள் முயன்று கொண்டு இருப்பதை நாம் ஓரளவு சாதித்துவிட்டோம். இந்திய என்ற துணைக் கண்டம் ஒரு தேசியமாக இருப்பது பெரிய சாதனைதான். அந்த வகையில் நாம் பிற கண்டங்களுக்கு முன்னோடிகளே ! ஒரு தேசியமாக நாம் இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கவே செய்கிறது. நம் நாட்டின் எல்லா சமூகங்களும, பகுதிகளும் சமமான வளர்ச்சி பெறுவது அதில் முதன்மையானது. ஆனால் நாம் சரியான பாதையில் தான் உள்ளோம் என்பது மகிழ்ச்சியே !

அன்புடன், புவனேஸ்வரன்.

அன்புள்ள புவனேஸரன்இந்தியாவின் தேசிய உருவகம் என்பது ஒரு மதச்சார்பற்ற இனச்சார்பற்ற மொழிச்சார்பற்ற நவீன தேசியமாகவே உருவகிக்கப்பட்டிருக்கிறது. ஆக்வேதான் இந்த மாபெரும் தேசத்தை இத்தனை இயற்கைச் சவால்கள் எதிர்ப்புக்ள் உள்நோய்களை தாண்டி முன்னெடுத்துச்செல்ல முடிந்திருக்கிறது. மத இன அடிபப்டையில் அமைந்த நம்மைச்சூழ இருக்கும் தேசியங்களுடன் ஒப்பிடும்போது இது புரியும்.ஜெ 

அன்புள்ள ஜெ

ஒருவரை அடையாளப்படுத்த அவரது மொழி மட்டுமே போதுமானதாக ஆகுமா? இதைப் படியுங்கள்.

http://tamizharkannotam.blogspot.com/2009/08/blog-post.html

நான் பிறப்பால் மராட்டியன் வங்கத்தில் வளாந்தவன். தமிழனாக வாழ்கிறேன். 13 வருடங்களாக. தமிழ்ப்பெண்ணை மணந்துள்ளேன். கர்நாடகத்தில் இருக்கிறேன்

ரமேஷ் டெண்டுல்கர்

அன்புள்ள ரமேஷ்

இந்தவகையான குரல்கள் எங்கும் ஒலிக்கின்றவை. ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் உள்ளே நுழைந்து வெறுப்பை உருவாக்கக் கூடியவை. இவர்களுக்கு வெறுப்பு அன்றி ஏதும் தெரியாது. இந்த மனநிலை எத்தனையோ நாடுகளை அழித்திருக்கிறது. பல கோடி மக்களை அகதிகளாக ஆக்கியிருக்கிறது. ஆனாலும் இந்த வெறுப்பு ஓயாது. இதற்கு எதிரான விழிப்புணர்ச்சி கொண்ட மக்கள் தப்புவார்கள். இல்லையேல் அழிவுதான்

இந்த கோரிக்கைகளின் விளைவுகளை எண்ணிப்பாருங்கள். ஒருகோடி தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் தொழில் செய்து வாழ்கிறார்கள். உலகின் இருபது நாடுகளில் தமிழர்கள் குடியேறி வாழ்கிறார்கள்!

இந்த மனநிலையின் மறுபக்கம்தான் ராஜ் தாக்கரேக்கள். மதவெறி கொண்ட அராபியர்கள். இனவெறி கொண்ட சிங்களர்கள். இதை நாம் நிராகரிப்பதென்பது இந்த வெறிகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதற்குச் சமம்.

ஜெ

முந்தைய கட்டுரைபுல்வெளிதேசம் 18, நதிக்கரையில்
அடுத்த கட்டுரைகாந்தியும் தொழில்நுட்பமும்