காந்தி கடிதங்கள்

அன்புள்ள ஜெ .மோ,

//நம்மில் பலர் காந்தியை அவருக்கு எதிரான பிரச்சாரம் மூலமே அறிந்தவர்கள்//
தங்களது இந்த வரிகள் என்னை மிக யோசிக்க வைத்தது. ஆனால் காந்தி மட்டுமல்ல பெரும்பாலும் பல விஷயங்களை நாம் எதிர் பிரசாரம் மூலமாகவே அறிந்துள்ளோம் எனப் பட்டது. முஸ்லிம் களைப்பற்றி,தலித்களைப்பற்றி,பிராமணர்களை பற்றி,பாகிஸ்தானை பற்றி சைனீஸ் ப்ரோடுக்ட்ஸ் பற்றி,அரவாணிகள் பற்றி…… இவற்றுள் பல உள்நோக்கம் கொண்ட கலப்பட மற்ற பிரசாரம் மட்டுமே. “பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே,மெய்போலும்மே ” என ஓங்கி ஒலித்த தமிழகத்தில் தான் பிரச்சாரம் மிகவே எடுபடுகிறது. “20 வருடம் தீவிரமா பிரசாரம் பண்ணா,கழுதய கூட சாமியா ஆக்கிபுடலாம்” – னு சொன்ன பெரியார் பிரசாரத்தின் பலத்தை நன்றாக உணர்ந்து இருந்தார். பலரும் அதிகம் மெனக்கெடாமல் முக்கியமான தளங்களில்கூட இறுக்கமான நம்பிக்கைகளை(beliefs) உருவாக்கிக்கொண்டு அதனை உண்மை (fact) என நம்புகிறார்கள். அவற்றை பற்றி கேள்வி,சந்தேகங்கள் எழும் பொது கடுமையை எதிர்வினை ஆற்றுகிறார்கள். உண்மைகளை தெரிந்துகொள்வதை விட தனக்கு தெரிந்ததே உண்மை என நிலை நாட்ட முயல்கிறார்கள்.(இது மூர்கதனமில்ல்யா?) இதைப்பற்றி உங்கள் கருது என்ன? மற்றபடி, “புதிய உலகத்திற்கு பயணம் போகும் பழைய உலகத்தானுக்கு” என் வாழ்த்துகள். அன்புடன், சத்தியநாராயணன்.

sathianarayanan,

 

அன்புள்ள சத்யநாராயணன் அவர்களுக்கு,

எந்த ஒரு சிந்தனையும்- காந்தியம்கூட– வெறும் மதநம்பிக்கையாக, அமைப்பாக ஆகும் சாத்தியம் இருக்கிறது. ஏனென்றால் சிந்தனை என்பது எளிய விஷயம் அல்ல. அது சவால்விடக்கூடிய, உழைப்பைக்கோரக்கூடிய விஷயம். தொடர்ந்து முன்னகர்வதற்கும் தன்னை தானே பரிசீலனைசெய்து தேவை என்றால் நிராகரித்துக்கொள்வதற்கும் திராணி உடையவர்களுக்கு உரியது. பெரும்பாலான மக்களுக்கு தேவையானது நம்பிக்கை மட்டுமே. ஆகவே அவர்கள் சிந்தனைகளை நம்பிக்கைகளாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஈவேராவை பொறுத்தவரை தனக்கு சிந்தனைசெய்யாதவர்கள் மட்டுமே தேவை என்று சொன்னவர் அவர்
ஜெ

 

காந்தியும் தொழில்நுட்பமும்

காந்தியும் சாதியும்

காந்தி கடிதங்கள்

காந்தியும் இந்தியும்

லாரி பேக்கர்

முந்தைய கட்டுரைவிக்கிபீடியா,தமிழ்டிக்ட்
அடுத்த கட்டுரைஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல்-1