ஒழிமுறிக்கு திரைக்கதை விருது

2013-ஆம் வருடத்தில் வந்த சிறந்த திரைக்கதைக்கான டி.ஏ.ஷாஹித் நினைவு விருது ஒழிமுறி படத்துக்காக எனக்கு வழங்கப்பட்டுள்ளது. திரைக்கதையாசிரியரும் இயக்குநருமான ரஞ்சித் தலைமையிலான குழு அதை தேர்ந்தெடுத்துள்ளது.

டி.ஏ.ஷாஹித் மலையாளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியர். 2003-இல் வெளிவந்த பாலேட்டன் அவரது முதல்படம். சென்ற ஆண்டு மறைந்தார். பிரபல திரைக்கதையாசிரியர் டி ஏ ரசாக்கின் தம்பி.

இந்தவிருது இவ்வருடம் முதல் வழங்கப்படுகிறது. வரும் அக்டோபர் 13 அன்று ரசாக்கின் சொந்த ஊரான கொண்டோட்டியில் நிகழும் விழாவில் விருது அளிக்கப்படும்.

ஒழிமுறிக்குக் கிடைக்கும் இரண்டாவது திரைக்கதை விருது இது. ஏற்கனவே கேரள திரை விமர்சகர் சங்க விருது வழங்கப்பட்டது.

முந்தைய கட்டுரைபுறப்பாடு II – 8, சண்டாளிகை
அடுத்த கட்டுரைபுறப்பாடு II – 9, காலரூபம்