வான்மீகி ராமாயணம்

நண்பர்களுக்கு

பிரதிவாதி பயங்கரம் அண்ணா அவர்களின் வால்மீகி ராமாயண
மொழிபெயர்ப்பு இரு பகுதிகளில் –

http://archive.org/details/VRPBASwAmiVol1

http://archive.org/details/VRPBASwAmiVol2

தேவ்ராஜ்

மிக்க நன்றி தேவ்.

பதஞ்சலி சாஸ்திரி என்பவர் 1920-30களில் வால்மீகத்தை தமிழில் மொழிபெயர்த்தார் என்று கேட்டிருக்கிறேன். நான் அதைப் பார்த்தது கிடையாது. வால்மீகத்தை நான் முற்றிலும் ஆங்கில மொழியாக்கம் வழியாகவே படித்து வருகிறேன். சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் மொழிபெயர்த்தும் ஒரு நூல் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஹரிகி அண்ணா அதைத் தான் வாசிக்கீறார்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணன் சுவாமி மாபெரும் வைணவ ஆசாரியர், அறிஞர். அவர் இந்த மொழிபெயர்ப்பும் செய்திருக்கீறார் என்பது புதிய செய்தி.

முதல் பாகத்தை டவுன்லோடு செய்து முதல் அத்தியாயத்தை ஆசையுடன் திறந்தேன். ஏமாற்றம்.

மூலத்தில் முதல் அத்தியாயத் தொடக்கத்தில், நாரதரை நோக்கி வால்மீகி பதினாறுக்கும் மேற்பட்ட குணங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி இவற்றையெல்லாம் உடையவன் யார் என்று கேட்கிறார்.. “கோன்வஸ்மின் ஸாம்ப்ரதாம் லோகே.. ” என்று தொடங்கி அற்புதமான, கவித்துவமான 8-9 சுலோகங்கள் உண்டு.. ஆனால், இந்த நூலில் இவர் ஒரே வாக்கியத்தில் இப்படி முடித்து விடுகிறார் –

“ஸ்ரீ நாரத முனிவரை நோக்கி வால்மீகி முனிவர் வணக்கத்துடன் “இக்காலத்தில் இவ்வுலகத்தில் எல்லா நற்குணங்களும் பொருந்தியிருப்பவன் யாவன்? என்று வினவ, யாவும் அறிந்த அந்த நாரத முனிவர் மிக மகிழ்ந்து விடை கூறினார்.”

பால காண்டம் ஐந்தாவது சர்க்கம் – அயோத்தி நகர வர்ணனம்.. அது அரைப்பக்கத்துக்குத் தான் இருக்கீறது.

இந்த நூல் துல்லியமான, சுலோகத்துக்கு சுலோகம் மொழியாக்கம் அல்ல, இது ஒரு குத்து மதிப்பான, சுருக்கமான மீள்-சொல்லல் மட்டுமே. அதுவும், கதை உள்ள பகுதிகள் மட்டும் கொஞ்சம் விரிவாக எழுதப் பட்டுள்ளன, மற்ற பகுதிகள் முழுசாகவே இல்லை.

அன்புடன்,
ஜடாயு

முந்தைய கட்டுரைஆழ்துயில்நடனம்
அடுத்த கட்டுரைபுறப்பாடு II – 17, பின்நின்றவர்