சிந்தாமணி கொட்லகெரே

எஸ்.ராமகிருஷ்ணன் அவரது தளத்தில் பாவண்ணன் மொழியாக்கம் செய்த சிந்தாமணி கொட்லகெரேயின் இரு கவிதைகளை எடுத்துக்கொடுத்திருக்கிறார். 2002 ல் நான் ஊட்டியில் ஏற்பாடுசெய்திருந்த கன்னட-மலையாள-தமிழ் கவியரங்குக்காக பாவண்ணன் மொழியாக்கம் செய்த கவிதைகள் அவை.

அடுத்தவருடம் குற்றாலத்திலும் இன்னொரு அரங்கை நடத்தினோம். சிந்தாமணி கொட்லகெரே வந்திருந்தார். இனிமையான உற்சாகமான குண்டு மனிதர். அவருடன் இருந்த நாட்கள் இனியநினைவாக உள்ளன. குற்றாலத்தின் அருவியைக்கண்டு ‘டிவைன்..டிவைன்’ என அவர் குதூகலித்துக்கொண்டே இருந்தது கண்ணில் நிற்கிறது. சிந்தாமணியின் கவிதைகளை நான் நடத்திய சொல்புதிதில் வெளியிட்டோம்

சிந்தாமணி பிஎஸ்என்எல் அதிகாரி. பெங்களூரில் அப்போது பணியியிலிருந்தார். பாவண்ணனின் சக ஊழியராக பின்னர் வடக்கே மாறுதலாகிப்போனபின் தொடர்பில் இல்லை.

மீண்டும் அந்நினைவுகளை ஒரே அலையாக உள்ளூர எழுப்பின இக்கவிதைகள். பாவண்ணனைப்பற்றியும் பிரியத்துடன் நினைத்துக்கொண்டேன்.

முந்தைய கட்டுரைஅ.முத்துலிங்கம் சந்திப்பு
அடுத்த கட்டுரைஆறு மெழுகுவர்த்திகள் – ஒரு கசப்பு