சம்ஸ்கிருதம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
எனக்கு இந்த மாதிரி சர்ச்சைகளில் கலந்து கொள்வது விருப்பம் இல்லாத விஷயம்.
இருப்பினும் வேறு ஒரு இடத்தில படித்ததை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விருப்பம்.
தமிழ்ஹிந்து டாட் காம் தளத்தில் சுப்பு என்பவர் எழுதியதில் இருந்து சில வரிகளை கீழே கொடுத்துள்ளேன்.

சம்ஸ்க்ருதம் இப்போதும் புத்துணர்வோடும் புத்துயிரோடும் இருக்கிறது என்ற காரணத்தால் தமிழகத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் எழுதிய நூல் ஒன்று சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

அந்த முக்கியப் புள்ளி தமிழக முதல்வர் மு. கருணாநிதி தான்.   அவர் எழுதிய குறளோவியத்தின் சமஸ்க்ருத மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது.  மொழிபெயர்த்தவர் கண்ணன்.  இவர் தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரான கி.ஆ.பெ. விசுவநாதத்தின் மருமகன்.

இந்தப் புத்தகத்தின் முன்னுரையில்


“மாண்புமிகு கருணாநிதி அவர்களுக்கு சமஸ்க்ருதத்தின் பாலுள்ள அன்பை அறிந்துகொண்டு சமஸ்கிருத மொழிபெயர்ப்பு செய்யப்படட்டும் என்ற அவரின் ஆசையையும் ஆணையையும் பெற்றுக்கொண்டு” மொழிபெயர்ப்பு செய்ததாக கண்ணன் எழுதியுள்ளார்
.
இப்படிக்கு,
சங்கரன்.
அன்புள்ள சங்கரன் அவர்களுக்கு
நல்ல விஷயம்தான். இன்று சம்ஸ்கிருத மொழிக்கு ஓர் அறிவுத்தள இணைப்புமொழி என்ற நிலை இல்லை என்றாலும் அதில் ஓர் அறிவியக்கம் உள்ளது. தமிழின் ஒரு புகழ்பெற்ற ஆக்கம் அங்கே செல்வது நல்லதுதானே
ஜெ
முந்தைய கட்டுரைகாந்தியும் இந்தியும்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் நாலாவது பதிப்பு