வரப்போகும் படங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

இப்போது என்னென்ன படங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? ஒரு உரையாடலில் நண்பர் கேட்டார். பிரச்சினை இல்லை என்றால் சொல்லலாமே

எஸ்.பிரசன்னா

பிரசன்னா,

இப்போது தமிழில் ஒரு படம் நடக்கிறது. வசந்தபாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சித்தார்த்,பிரித்விராஜ், நாசர் நடிப்பில்.

மலையாளத்தில் மூன்றுபடங்கள் படப்பிடிப்பில் உள்ளன

காஞ்சி [துப்பாக்கி விசை]

இந்திரதித், முரளிகோபி நடிக்க கிருஷ்ணகுமார் இயக்கும்படம். கதை-திரைக்கதை-வசனம் என்னுடையது.டோணி இசை. ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம்.

படப்பிடிப்பு முடிந்து அடுத்தகட்ட பணிகள் நடக்கின்றன

ஒன் பை டு

அருண்குமார் அர்விந்த் இயக்கத்தில் பகத் ஃபாசில் முரளிகோபி சியாமப்பிரசாத் அழகம்பெருமாள் நடித்துள்ள படம். சைக்காலஜிக்கல் திரில்லர். கதை-திரைக்கதை-வசனம் என்னுடையது

ஒருகட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது


நாக்கு பெண்டா நாக்கு டாக்கா

வயலார் மாதவன் குட்டி இயக்கத்தில் இந்திரஜித், முரளிகோபி, சங்கர், பார்வதி நடிக்கும் படம். ஸ்வாகிலி மொழியில் எனக்கு பிடித்திருக்கிறது, எனக்கு வேண்டும் என்று பொருள். முழுக்கமுழுக்க கென்யா-நமீபியாவில் படப்பிடிப்பு நடக்கும்படம். இசை கோபிசுந்தர். கதை திரைக்கதைவசனம் நான்

படப்பிடிப்பு ஒருவாரமாக நடக்கிறது

முந்தைய கட்டுரைஆறு மெழுகுவர்த்திகள்- உண்மையா?
அடுத்த கட்டுரைபுறப்பாடு II – 4, இரும்பின்வழி