தரிசனம்

ஜெ,

பூஜ்யஸ்ரீதலாய் லாமா அவர்களை நான் சந்தித்தது பற்றி எழுதியிருந்தீர்கள்

இன்று காலை தலாய் லாமா அவர்களை, அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சந்திக்கச் சென்றேன். குருவருள் மற்றும் என் பாக்கியம் தலாய் லாமா அவர்கள் என் கைகளைப் பற்றிக்கொண்டு சில வினாடிகள் பேசினார். ஊர், என்ன படிக்கிறேன் என விசாரித்தார். ‘கதா’ என்றழைக்கப்படும் வெண்பட்டு சால்வையைப் போர்த்தி ஆசீர்வதித்தார். நான் மிகமிக சந்தோஷமாக, பாக்கியவானாக உணர்ந்தேன். சமீப காலங்களில் ஒரு ஆளுமையைச் சந்திக்க இத்தனை ஆர்வமாக, எதிர்பார்ப்போடு, மனம் பணிந்து காத்திருந்தது இரண்டு முறை மட்டுமே.

அன்புடன், பிரகாஷ்.

முந்தைய கட்டுரைபோதிசத்வரின் புன்னகை
அடுத்த கட்டுரைஇந்தியப் பஞ்சமும் நாம் சாம்ஸ்கியும்