சென்ற 26 ஆகஸ்டில் ஆரம்பித்த இமயப் பயணம் இன்றுடன் முடிகிறது. ஸ்ரீநகர் வழியாக காஷ்மீருக்குள் புகுந்தோம். காஷ்மீரின் கிராமப்பகுதிகளில் பயணம் செய்தோம். கார்கில் வழியாக லடாக். பயணிகள் செல்லாத பல சமவெளிகளில் சிறப்பு அனுமதிபெற்று செல்ல முடிந்தது. இமயம் எனக்குப் புதிதல்ல. என் இருபது வயது முதல் நான் இங்கே வந்துகொண்டிருக்கிறேன். நண்பர்கள் சேர்ந்து வரும் மூன்றாவது இமயப்பயணம் இது. இன்று மதியம் சண்டிகர் வழியாக டெல்லி சென்று கோவை விமானம் ஏறுகிறோம். பயண அனுபவங்களை எழுத இணைய வசதி இல்லாத உள்நிலங்களில்தான் இதுவரை சென்றுகொண்டிருந்தோம். நாளைதான் நாகர்கோயில் செல்வேன். அதன்பின்னர் எழுதவேண்டும் .