நேரம் கிடைத்தால் ரப்பர் பற்றிய எனது எண்ணங்களை படியுங்கள்.
http://jeyakumar-srinivasan.blogspot.com/2009/08/blog-post_23.html
பயணங்களும், சந்திப்புக்களும் இனிதாக அமையட்டும்
வாழ்த்துக்கள்
ஜெயகுமார்
அன்புள்ள ஜெயமோகன் அவர்கள்,
உங்கள் கட்டுரைகளில் டி. ஆர். நாகராஜ் என்ற பெயர் தொடர்ந்து உபயோக படுத்துகிறீர்கள். யார் அவர்? இலக்கியத்தில் அவருக்கு என்ன இடம்? நீங்கள் குறிப்பிடும் அளவுக்கு முக்கியமானவரா? என்ன புத்தகங்கள் எழுதியுள்ளார்? கொஞ்சம் அவரை பற்றி தெரிவியுங்களேன்?
நன்றி.
அசோக்.
அன்புள்ள அசோக் குமார்,
டி ஆர் நாகராஜ் புகழ்பெற்ற கன்னட சிந்தனையாளர். திறனாய்வாளர். ஆங்கிலத்திலும் எழுதியவர். கன்னட தலித் -பண்டாயா இலக்கிய இயக்கத்துடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார். அவற்றைப் பற்றி எழுதினார்
அவரது Flaming Feet என்ற நூல் காந்திய சிந்தனையையும் அம்பேத்காரின் சிந்தனையையும் இணைக்க முயல்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி மெல்ல மெல்ல ஏற்றுக்கொண்டார்கள் என்பதை விவரிக்கிறது
நான் அவரை எடுத்த பெட்டி என்னுடைய இலக்கிய உரையாடல்காள் என்ற நூலில் உள்ளது. இதை எனி இன்டியன் புத்தக நிறுவனம் வெளியிட்டிருக்கிறது
ஜெ
அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு!
நீங்கள் எழுதிய சிறுவர் கதை நாவலின் பெயரை குறிப்பிட்டால், நான் அதை வாங்கி படிக்கும் முடிவில் இருக்கிறேன். நான் முதலில் கோகுலம் சிர்வர்மலர் மற்றும் அம்புலி மாமா சிறுவர் இதழ்களை வெறி கொண்டு படித்தது நினைவுக்கு வருகிறது. நீங்கள் சிறுவர் மலர் படிக்கும் இளம் சிறுவர்கள் பற்றி பேட்டியில் கூறி இருந்தீர்கள். அவர்களில் நானும் ஒருவனே! இப்போதும் எனக்கு படிக்க ஆவலாக உள்ளது. சிறுவயதில் அந்த சாகச பயணங்களுடன் நானும் சென்றது நினைவுக்கு வருகிறது. சிறுவர்களை கண்டால் அவர்களை போலவே பேசுவது எனக்கு பிடித்து இருக்கிறது. என் பக்கத்துக்கு வீட்டு குழந்தை என்னிடம் நன்றாக விளையாடுவான். அவனின் பெற்றோர் வந்தாலும் அவர்களிடம் செல்லாமல் என்னிடமே இருக்க அழுவான். சிறுவர்களை கவர அவர்களின் உலகத்துக்கு செல்ல முயற்சித்தால் போதும். அனால் புன்னகை உண்மையாக இருக்க வேண்டும். நீங்கள் கூட திரு. கோணங்கி அவர்களின் சிரிப்பை பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள்.
நன்றிகள்!
dhandapani
அன்புள்ள தண்டபாணி
பனிமனிதன் பிரதிகள் விற்றுப்போய்விட்டன. இப்போது கிடைப்பதில்லை. மறுபதிப்பு மீண்டும் வரும் என நினைக்கிறேன். பொதுவாக நம் மக்கள் பிள்ளைகளுக்கு தமிழ்ப்புத்தகம் வாங்கிக் கொடுப்பதில்லை. ஆகவே புத்தகம் சரியாக போகவில்லை. மறுபதிப்பு வர ஒருவேளை தாமதமாகலாம்
ஜெ