மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

1) தங்களின் 7-11-2010 மற்றும் 16-11-2010, கஞ்சிரா குறித்த கட்டுரையில் ஒரு ஐயத்தைத் தெரிவித்திருந்தீர்கள்.
//அந்த பெயரின் வரலாறு மட்டும்தான் மர்மமாக இருக்கிறது //

அதற்கான தகவல்:
புதுகோட்டையில் உள்ள சில சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு மணப்பாறையில் உள்ள மான்பூண்டியார் தான் குல தெய்வம். இவரை மாமுண்டி என்றும் நல்லாண்டவர் என்றும் அழைப்பதுண்டு. ஊருக்கு அருகில் உள்ள ஆற்றுக்கும் மாமுண்டி என்று பெயர். ஆகவே அவரின் குல தெய்வப்பெயரை வைத்திருக்கலாம்.

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்