சிவேந்திரன்

யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுகளில் ஒன்றான ஊர்காவற்றுறையில் உள்ள நாரந்தனை எனது சொந்த ஊர்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் பட்டப்படிப்பை முடித்தபின் தினக்குரல் பத்திரிகையில் பத்திரிகையாளராக இணைந்துகொண்டேன்.ஜனநாய செயற்பாட்டில் ஊடகத்தின் பங்கு என்ற டென்மார்க் அரசின் புலமைப்பரிசில் பயிற்சிநெறியை இக்காலகட்டத்தில் பூர்த்திசெய்துள்ளேன்.2006 இல் நாட்டு சூழ்நிலை காரணமாக வெளியேறி ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வாடிக்கையாளர் நலன்பேணும் பிரிவில் வேலை செய்த பின்னர் தற்போது மொத்த வர்த்தக நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறேன்.

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கதைகள் 11 , வாசுதேவன்- சுனில் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ -கடிதங்கள்